Hugh Jackman: ”ஹிட்மேன் ரோஹித் ஷர்மா தான் பிடிக்கும்” - ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன்!
தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தான் என்று ஹாலிவுட் நடிகரும், மார்வெல் திரைப்படமான டெட்பூல் & வால்வரின் படத்தில் நடிக்க உள்ளவருமான ஹக் ஜேக்மேன் கூறியுள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி:
கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் தொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் மும்பையில் உள்ள மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை வெற்றி பேரணி மேற்கொண்டனர். கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியதால் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர்.
ரோஹித் ஷர்மா தான் பிடிக்கும்:
இந்நிலையில் ரோஹித் ஷர்மா தான் எனக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் என்று ஹாலிவுட் நடிகரும், மார்வெல் திரைப்படமான டெட்பூல் & வால்வரின் படத்தில் நடிக்க உள்ளவருமான ஹக் ஜேக்மேன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவரிடம், நீங்கள் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர். உங்களுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை பிரியம். நீங்கள் நிறைய முறை கிரிக்கெட் விளையாடி இருக்கிறீர்கள்.
View this post on Instagram
இது தொடர்பாக உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்கமல் ஹக் ஜேக்மேன், “இப்போது எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தான். அவர் ஒரு பீஸ்ட்.” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை மார்வல் இந்தியா தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனைப்பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.