IND vs IRE: இந்திய அணியின் துணை கேப்டனாகும் ஜஸ்பிரித் பும்ரா.. அப்போ! ஹர்திக் பாண்டியாவின் நிலைமை..?
இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் ரோஹித் சர்மாதான். ஆனால், இந்திய அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்விதான் எழுந்துள்ளது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அணியில் யார் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பு எகிற தொடங்குகிறது. இந்த அணியே உலகக் கோப்பை அணியாகவும் இருக்கலாம்.
இந்த ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் ரோஹித் சர்மாதான். ஆனால், இந்திய அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்விதான் எழுந்துள்ளது.
Jasprit Bumrah might give tough competition to Hardik Pandya for ODI vice-captaincy 🇮🇳#AsiaCup2023 #JaspritBumrah #HardikPandya #India #CricketTwitter pic.twitter.com/uL1mjycn5N
— InsideSport (@InsideSportIND) August 20, 2023
முன்னதாக, இந்திய அணியின் துணை கேப்டனாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாக இருந்தார். ஆனால், தற்போது இதில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா vs ஜஸ்பிரித் பும்ரா:
வெளியான தகவலின்படி, ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தே ஒன்றே. இந்தநிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்படலாம். இதன்மூலம், துணை கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக உள்ளார். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவின் மோசமாக கேப்டன்சி காரணமாக, இந்திய அணியின் துணை கேப்டன் பதவியிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு பதிலாக, ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்று, தெரிகிறது.
கடந்த ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக இருந்தார். இது தவிர, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார். ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக ஆவதற்கு கடந்த ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக இருந்தார். இது தவிர, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக பார்க்கலாம்.
இரண்டாவது T20Iக்கான சாத்தியமான இரு அணிகள்:
இந்தியா - ரிதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ரின்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரபல கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ரவி பிஷ்னோய்.
அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பெக்கி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்.