T20 World Cup Hat Trick: பிரேட் லீ டூ கார்த்திக் மெய்யப்பன் .. டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் மாயாஜாலம் செய்த வீரர்கள்.. !
Hat Trick in T20 World Cup: டி 20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் யுஏஇ அணியின் வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார்.
டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடர் கடந்த 16 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெறும். இன்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இலங்கை மற்றும் யுஏஇ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யுஏஇ அணியின் வீரர் கார்த்திக் மெய்யப்பன் சிறப்பாக பந்துவீசி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இந்நிலையில் தற்போது வரை டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் எடுத்த வீரர்கள் யார் யார்?
பிரேட் லீ (2007 ):
2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வீரர் பிரேட் லீ ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஷகிபுல் ஹசன், மோர்தாசா மற்றும் அலோக் கபாலி ஆகியோரின் விக்கெட்டை எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் இதுவாகும்.
கார்டிஸ் காம்பர்(2021):
2007 ஆம் ஆண்டிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 3 பேர் ஹாட்ரிக் எடுத்து அசத்தினர். முதலில் அயர்லாந்து வீரர் கார்டிஸ் காம்பர் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அத்துடன் அவர் 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
வணிந்து ஹசரங்கா(2021):
2021 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் ஷார்ஜாவில் இலங்கை- தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஹசரங்கா தென்னாப்பிரிக்கா அணியின் மூன்று விக்கெட்களை சாய்த்து ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். இவர் மார்க்கரம், பவுமா மற்றும் பிரிட்டோரியஸ் விக்கெட்களை எடுத்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
காகிஷோ ரபாடா(2021):
அதே டி 20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடாவும் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார் . இவர் ஷார்ஜாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இதை செய்தார். அவர் வோக்ஸ், மோர்கன் மற்றும் ஜோர்டன் விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து அசத்தினார்.
That’s the Hat-trick!
— ICC (@ICC) October 18, 2022
We can reveal that this wicket from Karthik Meiyappan is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos of the Game packs from Sri Lanka vs UAE. Grab your pack from https://t.co/8TpUHbQQaa to own iconic moments from every game. pic.twitter.com/1MV0Rz9AI9
கார்த்திக் மெய்யப்பன்(2022):
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று நவடைபெற்ற முதல் சுற்று போட்டியில் யுஏஇ வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்தார். இவர் இலங்கை அணியின் பணுகா ராஜாபக்சே, அஷ்லங்கா மற்றும் ஷனகா ஆகியோரின் விக்கெட்டை எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் எடுத்த 5வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.