
Watch Video:"உசுரே நீதானே நீதானே"விவாகரத்திற்கு பின் மகனின் பிறந்தநாள் கொண்டாடிய பாண்ட்யா! வைரல் வீடியோ!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவரது மகன் அகஸ்தியாவின் நான்காவது பிறந்தநாளை இன்று (ஜூலை 30) கொண்டாடி உள்ளார்.

இலங்கையில் இந்திய அணி:
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள் மற்றும் ரோஹித் ஷர்மா தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. இதில் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே கடந்த ஜூலை 18 ஆம் தேதி இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவி நடாஷாவை பிரிவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இருந்தாலும் அகஸ்தியாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடாஷா வெளியிடும் போதெல்லாம் அதற்கு ஹர்திக் பாண்டியா ஹார்டின் எமோஜியை பகிர்வார். அந்த அளவிற்கு தனது மகன் மீது அவர் அன்பு வைத்திருக்கிறார்.
உசுரே நீதானே நீதானே:
இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியா இன்று தனது 4ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பாண்ட்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,
View this post on Instagram
நாள்தோறும் என்னை தொடர வைக்கிறாய். என் கிரைம் பார்ட்னருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் முழு இதயம், என் அகு! வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உன்னை நான் நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா பகிர்ந்த வீடியோவில் மகனுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது பதக்கம் - துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் ஜோடி அசத்தல்
மேலும் படிக்க:Manu Bhaker:பாரீஸ் ஒலிம்பிக்.. சுதந்திர இந்தியாவில் முதல் முறை! புது சகாப்தம் படைத்த மனு பாக்கர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

