மேலும் அறிய

Uganda Cricket : உலகக்கோப்பைத் தகுதிச் சுற்று போட்டி.. ட்ரில் வெற்றிபெற்ற உகாண்டா அணி..

உலகக்கோப்பை தகுதிப் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி உகாண்டா அணி த்ரில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தகுதிப் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி உகாண்டா அணி த்ரில் வெற்றி பெற்றது.

தகுதிச் சுற்றுப் போட்டிகள்:

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி தொடங்குகின்றன. இதில், தகுதிச்சுற்று அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2, க்ரூப் ஏ மற்றும் குரூப் பி என்று பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ வில் இலக்கை, நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அணிகளும், குரூப் பி-யில் மேற்கிந்திய தீவுகள் அணி- ஸ்காட்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட அணிகளும் போட்டியிடுகின்றன. இந்த பட்டியலில் இடம்பிடிப்பதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Uganda Cricket : உலகக்கோப்பைத் தகுதிச் சுற்று போட்டி.. ட்ரில் வெற்றிபெற்ற உகாண்டா அணி..

ஹாங்காங் பேட்டிங்:

இதில் குரூப் பி பிரிவில் உகாண்டா மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் போட்டியிட்டன. தகுதிச்சுற்று போட்டியின் 4வது போட்டியான இது புலவாயோ அத்லெட்டிக் க்ளப் மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாங்காங் அணியின் கேப்டன் நிஷகட் கான் மற்றும் ஐஸாஷ் கான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிஷகட் கான்  ஃப்ரான்க் பந்துவீச்சில் எல் பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக 6 பந்துகளுக்கு 7 ரன்கள் எடுத்திருந்த ஐஸஷ் கான் அவுட்டானார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பாபர் ஹயாத் 24 பந்துகளுக்கு 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கின்சிட் ஷாவும், ஸீசன் அலியும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினர். எனினும் ஸீசன் அலி 11 ரன்களில் வெளியேறினார்,- அடுத்தடுத்து இறங்கிய அர்ஷத் முகமது 1 ரன்னிலும், யாசிஸ்ம் முர்தஸா 3 ரன்னிலும், ஈஷன் கான் 6 ரன்னிலும், ஸ்காட் 2 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். கின்சிட் ஷா அதிகபட்சமாக 46 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களை எடுத்தது. 

உகாண்ட்டா தரப்பில் தினேஷ் நக்ரனி 4 ஓவர்கள் பந்துவீசி 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காஸ்மாஸ் 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ப்ஃரான்க், ஹென்றி, ரியாஸத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Uganda Cricket : உலகக்கோப்பைத் தகுதிச் சுற்று போட்டி.. ட்ரில் வெற்றிபெற்ற உகாண்டா அணி..

உகாண்டா பேட்டிங்:

 88 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது உகாண்டா அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர் முகாஸா மற்றும் சைமன்  ஆகியோர் களமிறங்கினர். சைமன் தான் சநதித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ரோஜர் 6 ரன்கள், கென்னத் கைஸ்வா டக் அவுட் ஆக அந்த அணி 26 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோனக் பட்டேல் 16 ரன்களும், ரியாசத் 28 ரன்களும் தினேஷ் நக்ரனி 11 ரன்களும் எடுத்தனர். 19 ஓவர்கள் முடிவில் 85 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது உகாண்டா அணி. வெற்றொல்லி 8 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில் காஸ்மாஸ் 1 ரன் அடிக்க, ரியாஸத் அலி 2 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தனர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் உகாண்டா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ஹாங்காங் தரப்பில் ஐசஸ் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது க்ஸன்ஃபர் 4 ஓவர்களில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget