Cricket History: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணியின் வரலாறு.. விபரம் உள்ளே..!
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த போட்டிகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த போட்டிகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். இந்திய அணியை இரண்டு முறை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய அணி என்றால் அது ஆஸ்திரேலியா அணி தான்.
கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு காலகட்டத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து தொடரை முழுமையாக இழந்த வரலாறெல்லாம் உண்டு. ஆனால், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற வரலாறு என்பது இருந்தாலும், தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் தோற்ற வரலாறு இதுவரை இல்லை. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அதாவது, 2020,2021, 2022,2023 ஆண்டுகளில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
2020: ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த இந்தியா 49.1 ஓவரில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 74 ரன்களும், கேஎல் ராகுல் 47 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பிஜேகம்மின்ஸ் மற்றும் கேடபிள்யூ ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆகியோரின் சதங்களால் ஆஸ்திரேலியா 256 ரன்களை எட்டியது. வார்னர் 128 ரன்களும், பின்ச் 110 ரன்களும் எடுத்தனர், ஆஸ்திரேலியா வெறும் 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.
2021: டி20 போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 151 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2022: டி20 போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்தது. விராட் கோலி மீண்டும் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். ஹர்திக் பாண்டியாவும் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் 170 ரனகள் குவித்த இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2023: ஒருநாள் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.
இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து117 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ஷெல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், அப்பேட் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். 11 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிஸ் ஹெட் 51 ரன்களும், மிட்ஷெல் மார்ஸ் 66 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.