மேலும் அறிய
Advertisement
HBD Sachin Tendulkar: 'கிரிக்கெட் கடவுள் சச்சின்..' டெண்டுல்கர் பற்றி அறியாத அரிய தகவல்கள்..!
தோனி, விராட், ரோகித் என்று கரகோஷம் எழுப்பும் ரசிகர்கள் கூட்டம் ஒரு காலத்தில் ஒன்றாக சேர்ந்து ஆர்ப்பரித்த ஒரு வார்த்தை சச்சின் டெண்டுல்கர் என்பது ஆகும்.
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். தோனி, விராட், ரோகித் என்று கரகோஷம் எழுப்பும் ரசிகர்கள் கூட்டம் ஒரு காலத்தில் ஒன்றாக சேர்ந்து ஆர்ப்பரித்த ஒரு வார்த்தை சச்சின் டெண்டுல்கர் என்பது ஆகும்.
அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள், அதிக ஆட்டநாயகன் விருது, சதத்தில் சதம் என்று எண்ணிலடங்காத, யாராலும் தொட முடியாத சாதனைகளை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். எப்படி கால்பந்திற்கு பீலேவோ, அதேபோல கிரிக்கெட்டிற்கு சச்சின் என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்தால் இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சென்ற நாட்கள் எல்லாம் உண்டு. அப்பேற்பட்ட மாபெரும் லெஜெண்டிற்கு இன்று 50வது பிறந்தநாள் ஆகும்.
இந்த பிறந்தநாளில் சச்சின் டெண்டுல்கர் பற்றி நாம் அறியாத தகவல்களை கீழே காணலாம்.
- சச்சின் டெண்டுல்கர் முதன்முதலில் தன்னுடைய மனைவி அஞ்சலியை மும்பை விமான நிலையத்தில்தான் சந்தித்தார். 1990ம் ஆண்டு அந்த சந்திப்பு நிகழ்ந்தது.
- சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மனைவி அஞ்சலியை திருமணம் செய்தபோது அவருக்கு வயது வெறும் 22 மட்டுமே ஆகும். அவரது மனைவி அஞ்சலி அவரை விட 5 வயது மூத்தவர் ஆவார்.
- டெண்டுல்கரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் ரசிகர். இதன் காரணமாகவே தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயர் சூட்டியுள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் முதன் முதலாக வாங்கிய கார் மாருதி 800 ஆகும். அந்த காரை அவர் கடன் வாங்கியே வாங்கியுள்ளார்.
- பாகிஸ்தான் அணியை பல முறை அலறவிட்ட சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவே அறிமுகமாகினார். அந்த போட்டியில் அவர் அடித்த ரன் 0 ஆகும்.
- சச்சின் தன்னுடைய இளம் வயதில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டுமென்று முயற்சித்துள்ளார். ஆனால், டென்னிஸ் லில்லியின் எம்.ஆர்.எஃப். பவுண்டேசன்1987ம் ஆண்டு அவரை தேர்வு செய்யவில்லை.
- உலகப்புகழ்பெற்ற ஷேன் வார்னே ஒருநாள் கிரிக்கெட்டில் 1 முறை மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், சச்சின் டெண்டுல்கர் 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஆடிய மிக இளவவயது இந்தியர் என்ற சாதனையும் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.
- முன்னாள் கேப்டன் கபில்தேவின் 100வது டெஸ்ட் போட்டியில்தான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக அறிமுகமானார்.
- பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரே ஆவார்.
- 3வது நடுவரால் முதன்முதலாக அவுட்டான வீரரும் சச்சின் டெண்டுல்கரே ஆவார்.
- சச்சின் டெண்டுல்கர் பெரும்பாலும் தனது போட்டிகளில் ஆடிய ஆட்டங்களில் 3.2 பவுண்ட் எடை கொண்ட பேட்டையே பயன்படுத்தியுள்ளார்.
- சச்சின் டெண்டுல்கருக்கு டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் ஆடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
- சச்சின் டெண்டுல்கர் தீவிர அமிதாப்பச்சன் ரசிகர் ஆவார்.
- ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆவார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
நிதி மேலாண்மை
லைப்ஸ்டைல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion