மேலும் அறிய

அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..! முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை.. அனில் கும்ப்ளே இரங்கல்..!

David Johnson Death: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

David Johnson Death: கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் இன்று காலமானார். 52 வயதான டேவிட் ஜான்சன் வீட்டின் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொத்தனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கனகஸ்ரீலே அவுட்டில் உள்ள எஸ்.எல்.வி பாரடைஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இன்று முற்பகல் 11.15 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். டேவிட் ஜான்சன் மரணம் தொடர்பாக தகவல் அறிந்ததும் கொத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நோயால் அவதிப்பட்டு வந்த டேவிட் ஜான்சன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கொத்தனூர் காவல்துறையினர் மேலும் பல தகவல்களை சேகரித்து வருகின்றனர்.  இதையடுத்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சனின் மறைவிற்க்கு கிரிக்கெட் உலகத்தினரை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது கிரிக்கெட் சகாவான டேவிட் ஜான்சனின் மரணச் செய்தியால் நான் வருத்தமடைந்துள்ளேன், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்.” என பதிவிட்டு இருந்தார். 

யார் இந்த டேவிட் ஜான்சன்..? 

1971ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரேயில் பிறந்த டேவிட் ஜான்சன், இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  1996ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான டேவிட் ஜான்சன், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணிக்காக விளையாடினார். அந்த தொடரில் டேவிட் ஜான்சன் மணிக்கு 157.8 கிமீ வேகத்தில் பந்துவீசி ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஸ்லேட்டரை வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். இது அன்றைய காலத்தில் அதிவேக பந்துவீச்சாக பார்க்கப்பட்டது. இது தவிர, டேவிட் ஜான்சன் ஒரு பேட்ஸ்மேனாக 4 சராசரியில் 8 ரன்கள் எடுத்தார். 

அதேசமயம் டேவிட் ஜான்சன் 26 டிசம்பர் 1996 அன்று இந்தியாவுக்காக கடைசியாக விளையாடினார். அதன் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவே இல்லை. ஆனால் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் பிற லீக்குகளில் தொடர்ந்து விளையாடினார். 

டேவிட் ஜான்சன் மொத்தம் 39 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், ஆல் ரவுண்டராக பார்க்கப்பட்ட டேவிட் ஜான்சன் தனது பேட்டிங் மூலம் 437 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Embed widget