(Source: ECI/ABP News/ABP Majha)
Sunil Gavaskar:தொடர் தோல்வி எதிரொலி; என்ன பண்ண போறீங்க?கம்பீருக்கு எதிராக கிளம்பிய கவாஸ்கர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பயிற்சியாளர் கம்பீரை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
என்ன செய்யப்போகிறது இந்திய அணி?
சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. மோசமான இந்த தோல்வி இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
அதேபோல் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் முறையில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இச்சூழலில் தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
கம்பீரின் சராசரி வெறும் 22 ரன்கள் தான்:
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பயிற்சியாளர் கம்பீரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசுகையில்,"ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி காத்துக் கொண்டிருக்கிறது. இந்திய வீரர்களை கம்பீர் சரியான முறையில் வழிநடத்த வேண்டும். இந்திய அணியில் யார் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். அபிஷேக் நாயர் மற்றும் ரியல் டோசேட் ஆகியோர் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடித்ததை விட கம்பீர் அதிகமாக அடித்திருப்பார்.
இதனால் கம்பீர் மட்டும்தான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை சொல்லித் தர வேண்டும். அப்படி செய்தால் இந்திய அணி வீரர்கள் நன்றாக விளையாடுவார்கள் என நினைக்கிறேன். எனினும் ஆஸ்திரேலிய மண்ணில் கம்பீரே தடுமாறி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் கம்பீரின் சராசரி வெறும் 22 ரன்கள் தான். இப்படி இருக்கும் பட்சத்தில் அவர்தான் மற்ற வீரர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லித் தர வேண்டும்.
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு தரத்தை அவர்களுடைய போட்டிகளின் முடிவே சொல்லிவிடும். இலங்கைக்கு எதிராக பல ஆண்டுகள் கழித்து நாம் தோல்வியை தழுவினோம். தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறோம். இதுதான் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்களுக்கு குழு செய்த விஷயமாக நான் கருதுகிறேன்.
இந்திய அணியில் முடிவெடுக்க வேண்டும் என்றால் கேப்டன் துணை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மூன்று பேரும் இணைந்து தான் செயல்பட வேண்டும். ஆனால் இங்கு தலையில் நடப்பதாக நினைக்கின்றேன்"என்று கூறியுள்ளார். கவுதம் கம்பீரை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்து இருப்பது பிசிசிஐ தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.