மேலும் அறிய

Dhoni Emotional | ”அது ஆறாத ரணம்.. அதை எப்படி கடந்து வந்தேன்..” தோனி சொன்ன எமோஷ்னல் சம்பவங்கள்..

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தன்னுடைய உலகக் கோப்பை ரன் அவுட்டிலிருந்து எப்படி வெளியே வந்தேன் என்பது தொடர்பாக கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் மற்றும் பங்கேற்று வருகிறார். சர்வதேச அளவில் தோனியின் கடைசி போட்டி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியாக அமைந்தது. 

இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 241 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி(50) மற்றும் ரவீந்திர ஜடேஜா(77) ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். இருவரும் 50 ரன்களுக்கு மேல் ஜோடியாக சேர்த்தனர். இதனால் கடைசி 2 ஓவர்களில் இந்திய வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 49ஆவது ஓவரை லாக்கி ஃபெர்குசன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை தோனி அசத்தலாக சிக்சருக்கு விரட்டினார். அதன்பின்னார் மூன்றாவது இரண்டு ரன்கள் எடுக்க தோனி முற்பட்டார். அந்த சமயத்தில் மார்டின் கப்டில் வீசிய த்ரோ நேரடியாக ஸ்டெம்பில் பட்டது. தோனி நூலிழையில் ரன் அவுட் ஆகினார். அதன்பின்னர் இந்திய அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்நிலையில் அந்த ரன் அவுட்டிலிருந்து தான் எப்படி வெளியே வந்துள்ளேன் என்பது தொடர்பாக தோனி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல விளையாட்டு பத்திரிகையாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். அவர் அதை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அதன்படி,”நான் நிச்சயம் டைவ் அடித்திருக்க வேண்டும். அந்த ரன் அவுட் என்னுடைய வாழ்க்கையில் இன்று வரை மறக்க முடியாத வடுவாக அமைந்துள்ளது. இந்த ரன் அவுட் காயத்தை மறக்க நான் இந்திய ராணுவத்தில் என்னுடைய படைக்கு சென்றேன். 

அங்கு சில நாட்கள் பணியாற்றினேன். இந்திய ராணுவத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் அங்கு யாரும் என்னை ஹீரோவாக கருதவில்லை. அனைவரையும் என்னுடைய படை வீரர் எண்ணை வைத்து அழைப்பார்கள். அதனால் நான் எல்லாவற்றையும் மறந்து இருந்தேன். அனைவருக்கும் நான் ஒரு முறை ராணுவ பயிற்சி சென்றதுதான் தெரியும். இந்த முறை நான் என்னுடைய ராணுவ படைக்கு சென்றது யாருக்கும் தெரியாது. 

Dhoni Emotional | ”அது ஆறாத ரணம்.. அதை எப்படி கடந்து வந்தேன்..” தோனி சொன்ன எமோஷ்னல் சம்பவங்கள்..

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் டைவ் அடித்ததே இல்லை. ரன் அவுட்டில் தொடங்கிய என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை ரன் அவுட்டில் முடிந்தது. நான் மட்டும் அன்று டைவ் அடித்திருந்தால் எல்லாம் மாற வாய்ப்பு இருந்திருக்கும். ஏனென்றால் கடைசி ஓவரை ஜிம்மி நீஷம் வீசுவார் என்பதை நன்றாக அறிந்து இருந்தேன். அதனால் தான் நான் ஜடேஜாவிடம் கடைசி ஓவரை முடிந்தவரை ஆட்டத்தை எடுத்து செல்வோம் என்று கூறினேன்” என தோனி தெரிவித்ததாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.  மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். அந்தப் போட்டியில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டாகினார். தாகாவில் ரன் அவுட் உடன் தொடங்கிய தோனியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் மான்செஸ்டரில் ரன் அவுட் உடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க: தென்னாப்பிரிக்காவுக்கு டிக்கெட் போடுங்க... ஒரே சீசனில் 4 சதங்கள்... கோலி ரெக்கார்டை சமன் செய்த ருதுராஜ்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Eng vs NZ: இங்கிலாந்து பிடியில் பாகிஸ்தான் குடுமி! அரையிறுதிக்கு செல்லுமா நியூசிலாந்து.. 160 ரன்கள் இலக்கு
Eng vs NZ: இங்கிலாந்து பிடியில் பாகிஸ்தான் குடுமி! அரையிறுதிக்கு செல்லுமா நியூசிலாந்து.. 160 ரன்கள் இலக்கு
IND Vs WI: ”உன் வாழ்க்கை உன் கையில்” ஜெயிச்சா போதும் - மே.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? அரையிறுதி வாய்ப்பு
IND Vs WI: ”உன் வாழ்க்கை உன் கையில்” ஜெயிச்சா போதும் - மே.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? அரையிறுதி வாய்ப்பு
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
Ind vs Zim: சிக்கிய ஜிம்பாப்வே பவுலர்கள்! காட்டடி ஆடித்த பேட்ஸ்மேன்கள்.. 257 ரன்கள் இலக்கு
Ind vs Zim: சிக்கிய ஜிம்பாப்வே பவுலர்கள்! காட்டடி ஆடித்த பேட்ஸ்மேன்கள்.. 257 ரன்கள் இலக்கு
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
Embed widget