Kapil Dev: ’இந்த மாதிரி கிரிக்கெட் மாறிவிடும்... உடனடியாக நடவடிக்கை எடுங்க..’ : எச்சரித்த கபில்தேவ்.. ஏன்?
ஐபிஎல் தொடர் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளிநாட்டு டி20 தொடர்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
ஐபிஎல் தொடரின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் டி20 தொடர்களை நடத்த திட்டமிட்டு வருகின்றன. அந்தவகையில் அடுத்து தென்னாப்பிரிக்கா டி20 தொடர், யுஏஇயின் ஐஎல்டி தொடர் என இரண்டு புதிய தொடர்கள் அறிமுகமாக உள்ளன. இதன்காரணமாக டி20 க்ளிப் கிரிக்கெட் தொடர்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இது தொடர்பாக ஆங்கில நாளிதழிலில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி, “சமீப காலங்களாக டி20 க்ளப் கிரிக்கெட் தொடர்கள் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது தென்னாப்பிரிக்கா டி20 தொடர் அறிமுகமாக உள்ளது. இதன்காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
With roaring whistles, everywhere we go, we stride into Johannesburg! 🥳#WhistlePodu 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) July 20, 2022
இந்த வகை கிரிக்கெட் தொடர்களை பாதுகாக்க ஐசிசி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கால்பந்தை போல் கிரிக்கெட் மாறிவிடும். ஐரோப்பாவில் கால்பந்து க்ளப் தொடர்கள் தான் அதிகமாக நடைபெறுகிறது. அந்த நாடுகள் 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் உலகக் கோப்பை தொடரில் தங்களுடைய நாடுகளுக்காக விளையாடி வருகின்றனர். அந்தவகையில் கிரிக்கெட் போட்டியும் மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளது.
க்ளப் கிரிக்கெட் வளர்ச்சி அதிகமாக தொடங்கினால் நாடுகளுக்கு இடையேயான தொடர்கள் குறை வாய்ப்பு அதிகமாகிவிடும். அத்துடன் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடர்களிலும் மட்டும் நாடுகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெறும் வாய்ப்பு வந்துவிடும். ஆகவே தற்போது ஐசிசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்ற காரணத்தை தெரிவித்து இருந்தார். இதனால் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு க்ளப் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக பலரும் தெரிவித்து வந்தனர்.
வெளிநாட்டு டி20 தொடர்களில் முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் நுழைந்தன. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இந்த இரண்டு ஐபிஎல் அணிகளும் கால் பதித்தன. அங்கு இரண்டு அணிகளை வாங்கியிருந்தன. அப்போது முதல் உலகத்தின் பல்வேறு டி20 தொடர்களில் ஐபிஎல் அணிகள் கால்பதித்து வருகின்றன. அந்தவகையில் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் 6 ஐபிஎல் அணிகள் புதிய அணிகளை வாங்கியுள்ளன. அதேபோல் சில ஐபிஎல் அணிகள் எமிரேட்ஸ் டி20 தொடரான ஐஎல் டி20 தொடரிலும் அணிகளை வாங்கியுள்ளன. இதன்காரணமாக இந்த இரண்டு டி20 தொடர்களும் மிகவும் முக்கியத்துவம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்