Fastest T20I Century: டி20 போட்டியில் வரலாற்று சாதனை..அதிவேக சதம்! எஸ்டோனிய வீரர் சாஹில் சவுகான் அசத்தல்!
எஸ்டோனியா அணி மற்றும் சைப்ரஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் 6 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டி20 வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார் எஸ்டோனிய அணி வீரர் சாஹில் சவுகான்.
எஸ்டோனியா - சைப்ரஸ்:
எஸ்டோனியா அணி மற்றும் சைப்ரஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் 6 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சைப்ரஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 191 ரன்கள் எடுத்தது. பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது எஸ்டோனியா அணி.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அர்சலன் அம்ஜத் ஹோண்டல் 5 ரன்கள், அலி மஸ்ஸூத் 1 ரன் மற்றும் ஸ்டூவர்ட் ஹூக் 7 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க அப்போது களத்திற்கு வந்தார் சாஹில் சவுகான். பரிதாபமாக இருந்த தன்னுடைய அணியை அதிரடியான ஆட்டத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயினர் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இருந்தது சவுகானின் ஆட்டம். சிக்ஸர்களும், பவுண்டரிகளையும் பறக்க விட்டார்.
டி20 போட்டியில் வரலாற்று சாதனை:
தன்னுடைய அதிர ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹில் சவுகான் அதிவேகமாக சதம் விளாசினார். அதாவது வெறும் 27 பந்துகளில் சதம் விளாசினார். அதன்படி கடைசி வரை களத்தில் நின்ற அவர் 41 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்ஸர்களை பறக்க விட்டு மொத்தம் 144 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் எஸ்டோனியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
டி20யில் ஒரு வீரரின் அதிவேக சதம்:
1 - சாஹில் சவுகான்: 27 பந்துகளில் சதம் சைப்ரஸ் அணிக்கு எதிராக.
2 - ஜான்-நிகோல் லோஃப்டி நேபாளத்திற்கு எதிராக 33 பந்துகளில் சதம்.
3 - குஷால் மல்லா: 34 பந்துகள் vs மங்கோலியா
4 - டேவிட் மில்லர்: 35 பந்துகள் vs வங்கதேசம்
5 - ரோஹித் ஷர்மா : 35 பந்துகள் vs இலங்கை
டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்:
1 - சாஹில் சவுகான்: 18 சிக்சர்கள் vs சைப்ரஸ்
2 - ஹஸ்ரதுல்லா ஜசாய்: 16 சிக்ஸர்கள் vs அயர்லாந்து
3 - ஃபின் ஆலன்: பாகிஸ்தானுக்கு எதிராக 16 சிக்ஸர்கள்
4 - ஜீஷன் குகிகேல்: ஹங்கேரிக்கு எதிராக 15 சிக்ஸர்கள்
5 - ஆரோன் ஃபின்ச் : இங்கிலாந்துக்கு எதிராக 14 சிக்ஸர்கள்
மேலும் படிக்க: UEFA Euro 2024: யுஇஎஃப்ஏ யூரோ கோப்பை.. 23 வினாடிகளில் முதல் கோல்; வரலாற்று சாதனை படைத்த அல்பேனியா!
மேலும் படிக்க: Watch Video: அடேங்கப்பா.. பாடிபில்டிங் ஸ்டைலில் கலக்கல்..பீச் வாலிபாலில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!