England vs New Zealand: கிலென் பிலிப்சின் அரை சதம் வீண்: நியூசிலாந்துக்கு முதல் தோல்வி
டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் 1 பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் 1 பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று குரூப் 1 பிரிவில் 33ஆவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தும், இங்கிலாந்தும் மோதின.
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடியது.
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். 1 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 52 ரன்களைப் பதிவு செய்தார். அதேபோல் பட்லர் 47 பந்துகளில் 73 ரன்களை குவித்தார். டிம் சவுதீ, மிட்செல் சான்ட்னர், , இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். லாக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
180 ரன்கள் இலக்கு
120 பந்துகளுக்கு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டெவன் கான்வே 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ஃபின் ஆலன் 16 ரன்களில் சாம் கரன் பந்துவீச்சில் ஸ்டோக்சிடம் கேட்ச் ஆனார்.கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக பொறுப்புடன் விளையாடி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். கிலென் மேக்ஸ்வெல் 36 ரன்களில் 62 ரன்களை குவித்தார். எனினும், அவரும் சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.ஜேம்ஸ் நீஷம், மிட்செல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று குரூப் 1 பிரிவில் 33ஆவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தும், இங்கிலாந்தும் மோதின.
"ரூம்தான் தனிமைக்கான இடம், அதிலும்…" -விராட் கோலி அறையில் இருந்து வெளியான வீடியோ குறித்து டிராவிட்!
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மழை குறுக்கீடு இல்லை. நாளை இந்தியா-வங்கதேசம் இடையே சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் 35ஆவது ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டம் அடிலெய்டில் நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 1.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
வங்கதேச அணி நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தெடார்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்தது.