ENG vs PAK T20 2022: பாகிஸ்தான் வந்த இங்கிலாந்து அணி... 17 ஆண்டுக்கு பிறகு மண்ணில் கெத்தாக கால் வைத்த வீரர்கள்..!
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. ஏழு டி20 போட்டிகள் கராச்சி மற்றும் லாகூர் என இரண்டு மைதானங்களில் நடைபெற இருக்கிறது. கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் முதல் நான்கு போட்டிகளும், லாகூரில் உள்ள கடாபி மைதானம் தொடரை முடிக்க இறுதி மூன்று போட்டிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
🗣️ Jos Buttler talks to the media as England's T20I squad arrives in Karachi for their first tour of Pakistan in 17 years#PAKvENG pic.twitter.com/Z9Zl0UzY0N
— Pakistan Cricket (@TheRealPCB) September 15, 2022
இந்தநிலையில், இந்த தொடருக்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு வந்து இறங்கியது. கிட்டதட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து அணி காலடி வைத்துள்ளது. இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருந்தது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியது. இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது எங்களுக்கு அவமரியாதை என்று தெரிவித்தது.
Welcome to Pakistan, @englandcricket 🙌
— Pakistan Cricket (@TheRealPCB) September 15, 2022
Show your excitement for the upcoming T20I series with an emoji 👇#PAKvENG pic.twitter.com/HxzBIDM0rw
2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் - இங்கிலாந்து தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் நடத்தப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பாகிஸ்தான் மைதானத்தில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வெற்றிகரமாக சுற்றுப்பயணம் செய்து விளையாடி முடித்தது.
ஏற்கனவே இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் இன்னும் தங்கள் அணியை பெயரிடவில்லை. ஆனால் 2022 ஆசியக் கோப்பையில் விளையாடிய அதே அணி விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காயம் காரணமாக ஃபகார் ஜமானைத் தவிர, மற்ற அனைவரும் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறலாம்.
இருப்பினும், இன்று மாலை இங்கிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டவணை விவரம்:
- 20 செப்டம்பர் 1வது T20 - கராச்சி
- 22 செப்டம்பர் 2வதுT20 - கராச்சி
- 23 செப்டம்பர் 3வது T20 - கராச்சி
- 25 செப்டம்பர் 4 வது T20 - கராச்சி
- 28 செப்டம்பர் 5 வதுT20 - லாகூர்
- 30 செப்டம்பர் 6 வது T20 - லாகூர்
- 02 அக்டோபர் 7 வதுT20 -லாகூர்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இங்கிலாந்து வீரர்கள் பட்டியல்:
ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), மொயீன் அலி (துணை கேப்டன்), ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் கர்ரன், லியாம் டாசன், பென் டக்கெட், ரிச்சர்ட் க்ளீசன், அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், லூக் வூட்.