ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி, 186 ரன்கள் வித்திஅயாசத்தில் அபார வெற்ற் பெற்றுள்ளது.
ENG Vs AUS ODI: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என சமநிலையை எட்டியுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதல்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியில், ஹாரி ப்ருக் தலைமையிலான இங்கிலாந்து அணி தோல்வியை தழுவ, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. இருப்பினும், இரண்டாவது போட்டியில் கேப்டனின் அபார ஆட்டத்தால், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தான், இன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
அடித்து நொறுக்கிய இங்கிலாந்து:
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். போட்டியின்போது மழை குறுக்கிட்டதால், போட்ட் 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் முடிவில், அதிகபட்சமாக கேப்டன் ஹாரி ப்ரூக், 58 பந்துகளில் 87 ரன்களை விளாசினார். அவருக்கு உறுதுணையாக பென் டக்கட் 63 ரன்களை சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய லிவிங்ஸ்டோன் வெறும் 27 பந்துகளில் 62 ரன்கள விளாசி அதிரடி காட்டினார். இதனால், 39 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை விளாசியது.
பொட்டலமாக சுருங்கிய ஆஸ்திரேலியா:
இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மிட்செல் மார்ஷ் 28 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களையும் சேர்த்தனர். அவர தொடர்ந்து வந்த மற்ற வீரர்களில் பெரும்பாலானோர், இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடக்கத்தில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை சேர்த்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 58 ரன்களை சேர்ப்பதற்குள் 10 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், 24.4 ஓவர்களில் 126 ரன்களை மட்டுமே சேர்த்து ஆஸ்திரேலிய அணி ஆல்-அவுட்டானது. இதனால், இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும், ப்ரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் 2-2 என சமநிலை வகிக்கின்றன.
இதையடுத்து தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை உறுதி செய்யும் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, நாளை பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா அணி தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின், ஐசிசி சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.