Harshit Rana: மீண்டும் மீண்டுமா..ருதுராஜ் கெய்க்வாட்டை வம்புக்கு இழுத்த ஹர்சித் ராணா! கொந்தளித்த ரசிகர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்திய ஹர்சித் ராணா, அவர் பெவிலியன் நோக்கி நடந்து சென்ற போது ஃப்ளையிங் கிஸ் கொடுத்து கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
துலீப் டிராபி தொடர்:
ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துலீப் டிராபி தொடர் நேற்று (செப்டம்பர் 5) தொடங்கியது. அதன்படி இந்த தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி முடிகிறது. துலீப் டிராபியில் மொத்தம் நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் கேப்டன்களாக செயல்படுகின்றனர்.
இதில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணியும் ஒரு போட்டியில் விளையாடி வருகிறது. அதேபோல்,மற்றொரு போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியும், சுப்மன் கில் தலைமையிலான இந்தியா எ அணியும் விளையாடி வருகின்றன.
இதில் இன்று (செப்டம்பர் 6) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்தியா சி அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் - சாய் சுதர்சன் கூட்டணி தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். 16 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற சாய் சுதர்சன் 1 பவுண்டரி உட்பட 7 ரன்கள் மட்டும் எடுத்து ஹர்சித் ராணா பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்சித் ராணா வீசிய பந்து இன் ஸ்விங்காகி உடலை நோக்கி வர, அதனை சாதுரியமாக எதிர்கொள்ள ருதுராஜ் கெய்க்வாட் முயற்சி செய்தார். ஆனால் அது நேராக 2வது ஸ்லிப் திசையில் நின்ற அதர்வா தய்டேவிடன் கைகளில் சென்று விழுந்தது. இதனால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். இதனை கொண்டும் வகையில் ஹர்சித் ராணா ஃப்ளையிங் கிஸ் கொடுக்கும் ரியாக்சனை செய்தார். இது ரசிகர்களுக்கு ஆத்திரமூட்டுவது போல் அமைந்தது.
— Gill Bill (@bill_gill76078) September 5, 2024
ஃப்ளையிங் கிஸ் ஏன் சர்ச்சையானது?
முன்னதாக ஐபிஎல் சீசன் 17ன் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய ஹர்சித் ராணா இதே செயலில் ஈடுபட்டார். அதாவது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் இது போன்ற செயலில் ஈடுபட்டது ரசிகர்களில் கடும் கோவத்தை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இச்சூழலில் தான் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஃப்ளையிங் கிஸ் கொடுப்பது போது செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தற்போது ஹர்சித் ராணாவிற்கு எதிராக ரசிகர்கள் சமூக வலைதளங்களில்கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீனியர் வீரர்களிடம் அவர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை யாராவது அவருக்கு சொல்லி கொடுங்கள் என்பது போன்ற பதிவுகளையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. பதக்க வாய்ப்பு உள்ளதா? இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன தெரியுமா?
மேலும் படிக்க: Cristiano Ronaldo:900 கோல்.. "தி கோட்"என நிரூபித்த ரொனால்டோ! கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை