மேலும் அறிய

2022-ஆம் ஆண்டில் ஒவ்வொரு வகையிலும் சிறந்த வீரர் யார்… தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த மூன்று பேர்!

இந்திய அணிக்கு வெற்றிகரமான ஆண்டு இல்லை என்றாலும் வீரர்கள் தனிப்பட்ட முறையில் நன்றாகவே விளையாடினார்கள். தினேஷ் கார்த்திக், இந்தியாவுக்காக ஒவ்வொரு வடிவத்திலும் சிறந்த வீரரை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் நேற்று (டிசம்பர் 28) 2022 ஆம் ஆண்டிற்கான மூன்று வடிவங்களிலும் இந்தியாவுக்காக தனது சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் இந்திய அணி

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்தியா 2022 ஆம் ஆண்டை வெற்றிகரமாக முடித்தது, ஆனால் இந்தியாவுக்கு இது மறக்கமுடியாத ஆண்டாகக் இருந்ததாக கூற முடியாது. இந்திய அணி 2022 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறியதுடன், பின்னர் நவம்பரில் 2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. இந்த மாதம் பங்களாதேஷுக்கு எதிரான ODI தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்ததுடன் இந்திய அணி தங்கள் கடைசி ஒயிட்-பால் தொடரை தோல்வியுடன் முடித்தது. இருப்பினும், இந்த ஆண்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் நன்றாகவே விளையாடினார்கள். மேலும் இதுகுறித்து கார்த்திக், கிரிக்பஸ்ஸிடம் பேசும்போது, இந்தியாவுக்காக ஒவ்வொரு வடிவத்திலும் சிறந்த வீரரை தேர்வு செய்தார். 

2022-ஆம் ஆண்டில் ஒவ்வொரு வகையிலும் சிறந்த வீரர் யார்… தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த மூன்று பேர்!

டெஸ்ட் போட்டிகளில்

2022 ஆம் ஆண்டில் விக்கெட் கீப்பர் பேட்டராக இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த செயல்பாட்டாளராக ரிஷப் பந்தை தேர்வு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் வேகமாக ரன் குவித்து அணிக்கு பெரிய அளவில் உதவிய அவர் தனது அதிரடி ஆட்டம் மூலம் பார்வையாளர்களையும் ஸ்வாரஸ்யமாக்கினார். டெஸ்ட் போட்டியை பொறுமையுடன் அனைவரையும் பார்க்க வைத்த பெருமை இந்த வருடம் அவரையே சேரும். இருப்பினும் இதே தாக்கத்தை ஒயிட்-பால் கிரிக்கெட்டில் செய்வதற்கு போராடிய அவர் தவறினார் என்றே கூற வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்: Vegetables Price: மக்களே இதை கவனிங்க.. காய்கறி வரத்தில் மாற்றம்.. காய்கறி விலையிலும் மாற்றமா? இன்றைய காய்கறி விலை நிலவரம்..

ஒரு நாள் போட்டிகளில்

2022 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த ஆட்டக்காரராக ஸ்ரேயாஸ் ஐயரை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்தார். 2022 ஆம் ஆண்டில் ஷ்ரேயாஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடு ஓவர்களில் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செயல்பட்ட அவர், விக்கெட்டுகள் வீழமல் தடுப்பதுடன் ரன் ரேட்டையும் கட்டுக்குள் வைத்திருந்தார். அவர் இந்த ஆண்டு இந்தியாவுக்காக அனைத்து வடிவங்களையும் சேர்த்து அதிக ரன்களை எடுத்த வீரர் ஆவர். அதிலும் ஷ்ரேயாஸின் சிறந்த ஆட்டங்கள் ஒருநாள் போட்டியில் தான் வந்தது. அதில் அவர் 15 இன்னிங்ஸ்களில் 55.69 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஆறு அரைசதங்களுடன் 724 ரன்கள் குவித்தார்.

2022-ஆம் ஆண்டில் ஒவ்வொரு வகையிலும் சிறந்த வீரர் யார்… தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த மூன்று பேர்!

டி20 போட்டிகளில்

எதிர்பார்த்தது போலவே, தினேஷ் கார்த்திக் 2022 ஆம் ஆண்டிற்கான T20I கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த வீரராக அதிரடி ஃபார்மில் உள்ள சூர்யகுமார் யாதவைத் தேர்ந்தெடுத்தார். சூர்யகுமார் T20I கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவராக 2022 ஆம் ஆண்டை முடித்தார். 31 இன்னிங்ஸில் ஆடிய அவர் 1164 ரன்களை அதிரடியாக ஆடி குவித்தார். இந்த ரன்களை அவர் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார் என்பதுதான் ஹைலைட். அவருடைய சராசரி 46.54. அவர் இரு சதங்கள் மற்றும் ஒன்பது அரைசதங்களையும் அடித்து, ஆண்டு முழுவதும் தடுக்க முடியாத காட்டாறாக செயல்பட்டார். பந்து வீச்சாளர்களையும் கேப்டனையும் எங்கு பீல்டர்களை நிறுத்துவது என்ற குழப்பத்திலேயே வைத்திருந்த அவரது ஆட்ட முறை அனைவரையும் கவர்ந்தது. மிஸ்டர் 360 ஆக இவ்வருடம் சுழன்ற அவரை தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget