(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023: சிஎஸ்கே அணிக்காக பயிற்சியை தொடங்கிய தீபக் சாஹர்.. ஐபிஎல்-க்கு மட்டும் தயாரா? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு தயாராக இருப்பதாகவும் உறுதி செய்துள்ளார்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு தயாராக இருப்பதாகவும் உறுதி செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் வருகின்ற மார்ச் முதல் வாரத்தில் இருந்து உள்நாட்டு வீரர்களுடன் பயிற்சியை தொடங்க இருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் ஏற்கனவே பயிற்சி மேற்கொண்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளும் பயிற்சி மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மட்டும் இன்னும் பயிற்சி முகாம் மேற்கொள்ளும் தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான அணி மார்ச் இரண்டாவது வாரத்தில் பயிற்சி முகாமை தொடங்கலாம் என தெரிகிறது.
10 ஐபிஎல் அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே தங்கள் உள்நாட்டு வீரர்களுடன் பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். மீதமுள்ள ஒன்பது ஐபிஎல் அணிகளும் விரைவில் பயிற்சிக்காக கூடி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் விரிவான பயிற்சிகளை மேற்கொள்ளும்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் களமிறங்குகிறது. தோனிக்கு ஐபிஎல் தொடரில் இதுவே கடைசி சீசனாக அமையும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிரான போட்டியில்தான் தோனி தனது கடைசி போட்டியில் விளையாட இருக்கிறார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
Everyone is getting fit for ipl 👀
— Prisha Kaur (@Prisha__Kaur) February 20, 2023
When IPL comes suddenly all players will become very fit....Money mongers IPL https://t.co/EO1VSwSH15
— IamSuren (@Ilovehimalayass) February 20, 2023
We will here more such news as IPL nears. https://t.co/9hwjRQw7iT
— Gachibowli Divakar (@Gachib0wliDvakr) February 20, 2023
இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், இந்தியன் பிரீமியர் லீக்கில் மீண்டும் களமிறங்குவதற்காக பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இந்தநிலையில், அது எப்படி ஐபிஎல் தொடருக்கு மட்டும் அனைத்து வீரர்களும் காயத்தில் இருந்து மீண்டு விடுகிறார்கள் என்று ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
சிஎஸ்கே ஐபிஎல் 2023 அட்டவணை:
- போட்டி 1: மார்ச் 31, 2023 - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
- போட்டி 2: ஏப்ரல் 3, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
- போட்டி 3: ஏப்ரல் 8, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
- போட்டி 4: ஏப்ரல் 12, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
- போட்டி 5: ஏப்ரல் 17, 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
- போட்டி 6: ஏப்ரல் 21, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை (இரவு 7:30 மணி )
- போட்டி 7: ஏப்ரல் 23, 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
- போட்டி 8: ஏப்ரல் 27, 2023 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி)
- போட்டி 9: ஏப்ரல் 30, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை (மதியம் 3:30 மணி)
- போட்டி 10: மே 4, 2023 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ (மதியம் 3:30 மணி)
- போட்டி 11: மே 6, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை (பிற்பகல் 3:30 மணி)
- போட்டி 12: மே 10, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
- போட்டி 13: மே 14, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
- போட்டி 14: மே 20, 2023: டெல்லி கேப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி (பிற்பகல் 3:30 மணி)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்எஸ் தோனி (கேப்டன்& விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷர் மத்ஷோவ், துஷர் மத்ஷோவ், துஷர் மத்கே தேஷ்பான் பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா.