Watch Video: மிரட்டலாக கேட்ச் பிடித்த மிட்செல்! மிரண்டு போன மில்லர் - மைதானத்தில் நடந்தது இதுதான்!
ODI WC 2023: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டேரில் மிட்செல் பிடித்த அபாரமான கேட்சிற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உலகக் கோப்பையில் இன்று புனேவில் நடக்கும் 32வது போட்டியில் தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும் பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் – வான்ட்ர் டுசென் ஜோடி அபாரமாக ஆடியது.
மிட்செல்லின் மிரட்டலான கேட்ச்:
இவர்கள் இருவரின் அபாரமான சதத்தால் 300 ரன்களை கடந்த தென்னாப்பிரிக்கா அணி கடைசி கட்டத்தில் மில்லரின் மிரட்டலான அரைசதத்தால் 350 ரன்களை கடந்தது. அபாரமாக ஆடிய மில்லர் ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் நீஷம் பந்தில் மிட்செல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அந்த ஓவரில் 4வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய மில்லர் அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு அனுப்ப முயன்றபோது, அனைவரும் சிக்ஸர் என்றே கருதினர். ஆனால், எல்லைக் கோட்டின் அருகில் நின்ற மிட்செல் மிக அபாரமாக அந்த பந்தை பிடித்து மேலே தூக்கிப் போட்டார். பின்னர். சிக்ஸர் எல்லைக்கு சென்றாலும் மீண்டும் மைதானத்தின் உள்ளே வந்து கேட்ச் பிடித்தார்.
View this post on Instagram
தோல்வியின் பிடியின் நியூசிலாந்து:
டேரில் மிட்செல் பிடித்த இந்த கேட்ச் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 357 ரன்களை குவித்தது. டி காக் 114 ரன்களும், வான்டர் டு சென் 133 ரன்களும், மில்லர் 30 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 53 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக நீஷம் 5.3 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே எடுத்து 69 ரன்களை வாரி வழங்கினார்.
358 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசிலஙாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வெற்றிக்கு இன்னும் 258 ரன்கள் தேவைப்படும் நிலையில், கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் நியூசிலாந்து அணியை காட்டிலும் தென்னாப்பிரிக்க அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க: Quinton De Kock Century: ஒரே உலகக் கோப்பையில் 4 சதம்! புதிய வரலாறு படைத்த டி காக்!
மேலும் படிக்க: Virat Kohli: சாதனையை பற்றி நான் யோசிக்கல...என்னோட ஒரே விருப்பம் என்ன தெரியுமா? விராட் கோலி ஓபன் டாக்!




















