மேலும் அறிய

Virat Kohli: சாதனையை பற்றி நான் யோசிக்கல...என்னோட ஒரே விருப்பம் என்ன தெரியுமா? விராட் கோலி ஓபன் டாக்!

சாதனைகளை பற்றி நான் யோசித்தது இல்லை. இந்திய அணி வெற்றி பெற உதவுவதையே நான் விரும்புகிறேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று  12 புள்ளிகளை பெற்று  +1.405 என்ற ரன் ரேட்டுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதே போக்கு நிலவினால் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில்  வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 48-வது சதத்தை பதிவு செய்தார் ரன் மிஷின் விராட் கோலி. மேலும், ஒரு சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார். அதேபோல், இந்த உலகக் கோப்பை தொடர் முடிவதற்குள் இரண்டு சதங்களை பூர்த்தி செய்தால்,  உலகிலேயே ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். 

நெனச்சு கூட பாக்கல:

இச்சூழலில் இது குறித்து விராட் கோலி பேசிகையில், “நான் எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கும் போது இவ்வளவு ரன்கள் மற்றும் சதங்கள் அடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை. நான் கிரிக்கெட்டில் எனது பயணத்தை தொடர்வதற்கு கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார். நான் எப்போதும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.

ஆனால் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த சாதனைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. யாராலும் நாம் என்னென்ன சாதனைகளை செய்ய வேண்டும் என்று திட்டமிட முடியாது. இந்த 12 ஆண்டுகளில் நான் இத்தனை சாதனைகள் செய்வேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.  எனது ஒரே கவனம் என்னவென்றால் நான் என் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும்.  கடினமான சூழலிலும் அணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று தான் நினைப்பேன்” என்று கூறினார்.

நூறு சதவீத பங்களிப்பு:

தொடர்ந்து பேசிய அவர், “எனக்குள் கிரிக்கெட் மீதான திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக நிறைய மாற்றங்களை செய்தேன். எனக்கான ஒழுக்கமான ஒரு வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டேன்.  எனக்குள் எப்போதும் ஒரு உந்து சக்தி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதில் நான் நிபுணத்துவம் பெற்றவன் எல்லாம் கிடையாது. விளையாட்டு தான் என்னுடைய முயற்சிகளை அங்கீகரிக்கிறது.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது இதுதான்.  நான் ஒவ்வொரு முறை மைதானத்தில் விளையாடும்போதும் எனது நூறு சதவீத பங்களிப்பை கொடுத்தே விளையாடி உள்ளேன்” என்று கூறியுள்ளார்

மேலும் படிக்க: PAK vs BAN Match Highlights: ஒரு வழியாக முடிந்த தோல்வி பயணம்.. பாகிஸ்தான் அபார வெற்றி - வங்கதேசம் அவுட்

மேலும் படிக்க: Virat Kohli 49th Century: பிறந்த நாளில் அதை செய்வீங்கனு நம்புறேன்... ரன் மிஷின் கோலியை வாழ்த்திய பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget