(Source: ECI | ABP NEWS)
Watch Video: விஜயின் 'நான் ரெடி' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் பிரபலம்... வைரலாகும் வீடியோ!
நடிகர் விஜயின் நான் ரெடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் பிரபலத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்து இருக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நான் ரெடி' பாடல், விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகி ஹிட் ஆனது.
'நான் ரெடி' பாடலுக்கு பல பிரபலங்கள் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ஆந்த லிஸ்ட்டில் மேலும் ஒரு பிரபலமும் இணைந்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தான் அது. அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
லோகேஷ் கனகராஜுடன் ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து ‘லியோ’ படத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. 6 மாதமாக நடைபெற்று வந்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. விஜய்க்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளதை போன்று லோகேஷ் படத்தை நம்பி சென்று பார்ப்பதற்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இவர்களின் காம்போவில் உருவாகி உள்ள லியோ ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க,
Ashwin- Jadeja: இதுதான் கூட்டணி...! 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் - ஜடேஜா ஜோடி..!




















