தாய் மாமன் மகளையே மணந்து மாப்பிள்ளையான கிரிக்கெட்டர்கள் யார்? யார்? தெரியுமா?
பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது உறவுக்கார பெண்களையே திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி அவர்களது மனைவிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி டெண்டுல்கர், தோனி – சாக்ஷி, விராட்கோலி – அனுஷ்கா சர்மா ஆகிய தம்பதிகள் மிகவும் பிரபலம். ஆனால், பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது சொந்த உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்துள்ளனர். அவ்வாறு தங்களது உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.
சேவாக் – ஆர்த்தி தம்பதி :
இந்திய அணியின் அதிரடி வீரர் சேவாக். இவரது அதிரடிக்கென்று பல ரசிகர்கள் உள்ளனர். இவரது மனைவி ஆர்த்தி ஆலவாத். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பு ஒன்றாக வெளியில் சுற்றிய புகைப்படங்கள் அப்போது வைரலாகியது. இதையடுத்து, 2004ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், இவர்கள் இருவருமே நெருங்கிய உறவினர்கள்.
ஷாகித் அப்ரிடி – நாடியா :
பாகிஸ்தானின் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி. பூம்பூம் அப்ரிடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அப்ரிடியின் மனைவி பெயர் நாடியா. இவரது மனைவி நாடியா அப்ரிடியாவின் தாய்மாமன் மகள் ஆவார். இதையடுத்து, இவர்கள் இருவரும் 2000ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
சயீத் அன்வர் – லூப்னா அன்வர் :
பாகிஸ்தான் அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் சயித் அன்வர். இடது கை பேட்ஸ்மேனான இவர் மிகுந்த அதிரடியான ஆட்டக்காரர். குறிப்பாக, இந்தியாவிற்கு எதிராக மட்டும் என்றால் ஆக்ரோஷமாக விளையாடும் வல்லமை கொண்டவர். இவர் லூப்னா என்பவரை கடந்த 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். லூப்னா இவரது உறவுக்கார பெண் ஆவார். மேலும், லூப்னா ஒரு மருத்துவர்.
முஸ்தபிசீர் ரஹ்மான் – சமியா பர்வீன் :
வங்காளதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்தபிசீர் ரஹ்மான். வங்காளதேச அணிக்காக ஏராளமான போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்த நம்பிக்கை வீரரான இவர், தனது தாய்மாமன் மகளான சமியா பர்வீனையே திருமணம் செய்துள்ளார். சமியா பர்வீன் தாக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் உளவியல் மாணவராக படித்து வருகிறார்.
மொசாடெக் ஹொசைன்- ஷர்மீன் சமீரா :
வங்காளதேச அணியின் இளம் மற்றும் வளர்ந்துவரும் வீரர் மொசடெக் ஹொசைன். இவருக்கு தற்போது 26 வயதுதான் ஆகிறது. ஆனால், இவர் தனது 16-வது வயதிலே தனது உறவுக்கார பெண்ணாகிய ஷர்மீன் சமீராவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2012ம் ஆண்டே நடைபெற்று விட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்