Cheteshwar Pujara: ஐ.பி.எல்.லாம் போரிங்..! இங்க வந்து என் ஆட்டத்தை பாரு... கவுண்டி லீக்கில் சதத்தால் கலக்கும் புஜாரா..!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன், சேதேஷ்வர் புஜாராவின் இந்த ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்திய அணியை சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் தற்போது ஐபிஎல் 16வது சீசனில் பிஸியாக விளையாடி வருகின்றனர். இப்படியான சூழலில் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய அங்கமாக இருக்கும் புஜாரா, கவுண்டி சாம்பியன்ஷிப் 2023 தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். புஜாரா தற்போது குளோசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் அபார சதம் விளாசியுள்ளார். இரண்டாவது டிவிஷன் கவுண்டி சாம்பியன்ஷிப்பின் இந்த போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் சேதேஷ்வர் புஜாரா, ஆட்டத்தின் மூன்றாவது நாளில் 191 பந்துகளை எதிர்கொண்டு தனது சதத்தை பூர்த்தி செய்தார். முன்னதாக, புஜாரா டர்ஹாமுக்கு எதிரான போட்டியில் அணிக்கு கேப்டனாக இருந்தபோது சதத்துடனே இந்த கவுண்டி சீசனையும் தொடங்கினார்.
💯 @cheteshwar1
— Sussex Cricket (@SussexCCC) April 29, 2023
Phenomenal. 👏 pic.twitter.com/dP7tTCsgUw
வாசிம் ஜாஃபர் சாதனையை முறியடித்த புஜாரா:
முன்னாள் இந்திய தொடக்க வீரர் வாசிம் ஜாஃபரின் முதல் தர கிரிக்கெட்டில் சதங்கள் அடித்த சாதனையை சேதேஷ்வர் புஜாரா தற்போது முறியடித்துள்ளார். வாசிம் ஜாஃபர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 57 முதல் தர சதங்களை அடித்துள்ளார். இப்போது 58 முதல் தர சதங்கள் அடித்து சேதேஷ்வர் புஜாரா தற்போது 4வது இடத்திற்கு முன்னேறினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன், சேதேஷ்வர் புஜாராவின் இந்த ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. வருகின்ற ஜூன் 7 முதல் ஓவரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாட இருக்கிறது. இதற்கு முன்பே புஜாரா சரியான பார்மில் இருக்கிறார், 35 வயதான புஜாரா இந்த கவுண்டி சீசனில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் 280 ரன்கள் எடுத்துள்ளார். மறுபுறம், முதல் தர போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் மற்றும் விஜய் ஹசாரே ஆகியோருக்குப் பிறகு இப்போது சேட்டேஷ்வர் புஜாரா அடுத்த இடத்தில் இருக்கிறார்.
அதிக முதல் தர சதம் அடித்த வீரர்கள் பட்டியல்:
- 81 - சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர்
- 68 - ராகுல் டிராவிட்
- 60 - விஜய் ஹசாரே
- 58* - சேதேஷ்வர் புஜாரா
- 57 - வாசிம் ஜாஃபர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அணி:
இந்திய அணி விவரம்: ரோகித்சர்மா(கேப்டன்), விராட்கோலி, சுப்மன்கில், கே.எல்.ராகுல்,கே.எஸ்.பரத், அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ்யாதவ், ஜெய்தேவ் உனத்கட், புஜாரா, ரஹானே
ஆஸ்திரேலிய அணி விவரம்: கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், கவாஜா, லபுசக்னே, லயன், மிட்ஷெல் மார்ஷ், மர்பி, ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்