WPL 2023: மும்பை அணிக்கு பயிற்சியாளர்களை அறிவித்த நீடா அம்பானி.. களமிறங்கிய ஜூலன் கோஸ்வாமி.. முழு விவரம்!
இந்திய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜீலன் கோஸ்வாமி மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமான புதிய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
![WPL 2023: மும்பை அணிக்கு பயிற்சியாளர்களை அறிவித்த நீடா அம்பானி.. களமிறங்கிய ஜூலன் கோஸ்வாமி.. முழு விவரம்! Charlotte Edwards Named Head Coach Of Mumbai Franchise Jhulan Goswami in mentor and bowling coach WPL 2023: மும்பை அணிக்கு பயிற்சியாளர்களை அறிவித்த நீடா அம்பானி.. களமிறங்கிய ஜூலன் கோஸ்வாமி.. முழு விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/5f921ffd39933d94f04b10ce4ad1694d1675664187860571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற இந்திய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜீலன் கோஸ்வாமி மகளிர் பிரீமியர் லீக்கில் (WPL) மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமான புதிய அணிக்கு ஆலோசகராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் தேவிகா பால்ஷிகர் பேட்டிங் பயிற்சியாளராகவும், துருப்தி சந்த்கட்கர் பட்டாச்சார்யா அணியின் மேலாளராகவும் செயல்பட இருக்கின்றன.
ஜூலன் கோஸ்வாமி:
கடந்த ஆண்டு இங்கிலாந்து எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய ஜூலன் கோஸ்வாமி, அந்த தொடருடன் ஓய்வுபெற்றார். இந்திய அணிக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடியுள்ள ஜூலன் கோஸ்வாமி, 350 க்கு மேற்பட்ட சர்வதேச விக்கெட்களை எடுத்துள்ளார். மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியர் என்ற பெருமையையும், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் படைத்துள்ளார்.
ஜூலன் கடந்த 2016ம் ஆண்டு மகளிர் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். ஓய்வுக்குப் பிறகு பெங்கால் மகளிர் அணிக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.
சார்லோட் எட்வர்ட்ஸ்:
சார்லோட் மகளிர் கிரிக்கெட்டின் அனைத்து காலத்திலும் சிறந்தவர்களில் ஒருவர். அவரது 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இவரது தலைமையின் கீழ் டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்டில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சார்லோட், இதுவரை 23 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 95 டி0 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டின் ICC மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். ஆங்கில மகளிர் கிரிக்கெட் டி20 உள்நாட்டுப் போட்டிக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
போட்டி வடிவம்:
மகளிர் ஐபிஎல்-லில் 5 அணிகள் மட்டுமே பங்கேற்கும் நிலையில் லீக் மற்றும் பிளேஆஃப் சுற்றுகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரை விளையாடுகின்றன. அதில், வெற்றிபெறும் அணி முதலில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும்.
அணிகள் ஏலம்:
கடந்த மாதம் நடைபெற்ற அணிகளுக்கான ஏலத்தில் ஐந்து அணிகளும் சேர்த்து மொத்தமாக ரூ.4669.99 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன. இதன்படி, மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அணிகளுக்கான ஏலம் , 2008 ஆம் ஆண்டு அறிமுகமான ஆண்களுக்கான ஐபிஎல் அணிகளின் ஏலத்தொகையை விட அதிகமாகும்.
அணிகளின் விவரங்கள்:
அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கு அதானி ஸ்போர்ட்ஸ் லைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. மும்பை அணியை ரூ. 912.99 கோடிக்கு இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், பெங்களூரு அணியை பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. டெல்லி அணியை ரூ.810 கோடிக்கு jsw gmr கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன. இதன் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.4669.99 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)