Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை நடத்துகிறது பாகிஸ்தான்; டிக்கெட் போடுமா இந்தியா?
Champions Trophy 2025: முதல் முறையாக ஐசிசி போட்டியை தனியாக நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றுள்ளது. கடைசியாக பாகிஸ்தான் 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நடத்தியது.
![Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை நடத்துகிறது பாகிஸ்தான்; டிக்கெட் போடுமா இந்தியா? Champions Trophy 2025 PCB signs hosting rights agreement of ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை நடத்துகிறது பாகிஸ்தான்; டிக்கெட் போடுமா இந்தியா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/13/133b27942473da527db3bc5c8c681c98_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் ஹோஸ்டிங் உரிமையை இழக்கக்கூடும் அல்லது சில போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படலாம் என்று ஆங்கில ஊடகங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்த பின்னர் செய்திகள் வெளியானது. சில போட்டிகள் என குறிப்பிட்டது இந்திய விளையாடவுள்ள போட்டிகள்தான்.
சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ நடத்தும் நாடு பாகிஸ்தான் என ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருதாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் சாம்பியன்ஸ் டிராபியை ஹோஸ்டிங் செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல் இருந்தது. நீண்ட காலமாகவே இழுபறியாக இருந்த இந்த ஒப்பந்த கையெழுத்தென்பது தற்போது நிறைவடைந்துள்ளது. இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஹோஸ்டிங் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு விளையாடச் சென்றது, அதன் பின்னர் பாதுகாப்பு காராணங்கள் கருதி இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்ல வில்லை. நாளடைவில் இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் காரணங்கள், எல்லை பதற்றங்கள் என இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர்களும் நடைபெறாமலே போனது. இறுதியாக 2012- 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்ததுதான் கடைசி. இரு அணிகளும் ஐசிசி தொடரில் மட்டும் விளையாடி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அரசியல் காரணங்கள் ஒட்டுமொத்தமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒருவித அக்ரோசமான அணுகுமுறையை வளர்த்து விட்டது என்றே கூறவேண்டும். இதனால் இரு அணிகள் ஐசிசி போட்டிகளில் மோதும்போது பெரும் எதிர்பார்ப்பும் களத்தில் அனலும் பறக்கின்றது.
இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி 2025 பாகிஸ்தான் நடத்த ஒப்பந்தம் செய்துள்ளாதால், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுகுச் செல்லுமா செல்லாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவுக்குள்ள அதிகார பலத்தினை பயன்படுத்தி தனது போட்டிகளை மட்டும் பாகிஸ்தான் அல்லாத வெளிநாடுகளில் நடத்திக் கொள்ளச் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு சரியான எடுத்துக்காட்டு, ஆசிய கோப்பை நடத்தப்பட்டதுபோல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட்டால், சில போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படலாம், மீதமுள்ளவை வெளிநாட்டில் நடத்தப்படலாம். குறிப்பாக இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாது. சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. முதல் முறையாக ஐசிசி போட்டியை தனியாக நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றுள்ளது. கடைசியாக பாகிஸ்தான் 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நடத்தியதுதான்.
2023 ஆசிய கோப்பைக்கு, போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல மறுத்துவிட்டது. இதையடுத்து இந்தியாவின் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு விளையாட இரண்டு முறை வந்துள்ளது. அதாவது 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட வந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சமீபத்தில் அகமதாபாத்தில் ஐசிசி நிர்வாகக் குழுவுடன் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மீண்டும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் அதற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கூறியதாக கூறப்படுகின்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)