மேலும் அறிய

Chahal | நானும், குல்தீப் யாதவும் தோனியை முழுதாக நம்பினோம்.. அஷ்வினிடம் நினைவுகளை பகிர்ந்த சாஹல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர் அஸ்வின் பேசியது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான விஷயம் என்றால் அது எப்போதும் சமூக வலைதளங்களில் வைரல் தான். அதிலும் குறிப்பாக அவர் செய்த செயல் தொடர்பாக ஒரு பதிவு என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும். 

தோனியின் தலைமையின்கீழ் அறிமுகமான இந்திய அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், தனது யூடியூப் சேனலான "DRS with Ash" என்ற சேனலில் தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அதேபோல், அனைத்து நாட்டு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களின் அனுபவங்களையும் கேட்டு அந்த யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். 

அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுடன் உரையாடினார். அதில், சாஹல் தனது கிரிக்கெட் வாழ்க்கை, பெங்களூர் அணியின் விளையாடியது, பெங்களூர் அணியில் இருந்து எப்படி இந்திய அணிக்கு தேர்வானேன் என்பது போன்ற பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

அப்பொழுது, திடீரென அஷ்வின் சாஹல் பேசும்போது குறிப்பிட்டு கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், எப்பொழுதும் பந்து வீச்சாளர்களுக்கும், பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பருக்கு நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். அப்படி உங்களுக்கும் முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு இடையிலான பிணைப்பு எத்தகையது என்று கேட்டார். 

அதற்கு பதிலளித்த சாஹல், நானும் சரி, குல்தீப் யாதவும் சரி தோனியை முழுதாக நம்பினோம். அந்த வகையில் தோனி எங்களுக்கு நிறைய உதவினார். பந்து வீசும்போது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைத்தது இல்லை. ஒரு சமயம் சௌத் ஆப்பிரிக்கா அணியை சார்ந்த கிளாசென் நான் போட்ட பந்துகளை எல்லாம் மைதானத்திற்கு வெளியே தூக்கி அடித்தார். அன்று நான் சௌத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டி 20 போட்டியில் 64 ரன்களை விட்டுகொடுத்தேன். குறிபிட்ட ஓவர் போட்டிகளில் அதிக ரன் கொடுத்த வீரர் என்ற என்ற மோசமான சாதனையும் அன்று எனக்கு கிடைத்தது. திடீரென என்னை பார்த்து தோனி ஓடிவந்தார். 

Chahal | நானும், குல்தீப் யாதவும் தோனியை முழுதாக நம்பினோம்.. அஷ்வினிடம் நினைவுகளை பகிர்ந்த சாஹல்!

அப்பொழுது, நான் இப்ப என்ன செய்ய வேண்டும் மஹி பாய் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்,ஒண்ணுமில்ல, உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். இது உங்கள் நாள் அல்ல, நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் ஆனால் அது நடக்கவில்லை என்று எனக்குத் தெரியும். அதிகம் யோசிக்க வேண்டாம், உங்கள் நான்கு ஓவர்களை முடித்துவிட்டு நிதானமாக இருங்கள் என்று தோனி தெரிவித்தார் என்றார். 

யுஸ்வேந்திர சாஹல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புவதாகக் கூறினார். பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மெகா ஐபிஎல் ஏலத்தில் சாஹல் வேறு ஒரு அணியில் தேர்ந்தெடுக்க படலாம். அவரை தற்போது பெங்களூரு அணி விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget