CAN vs IRE: டி20 உலகக் கோப்பை போட்டியில் மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம்! அயர்லாந்தை அலறவிட்ட கனடா..!
CAN vs IRE: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிக்கோலஸ் கிர்டன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கனடா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சிறப்பான பந்துவீச்சின் அடிப்படையில் கனடா அணி இந்த வெற்றியை தனதாக்கியது.
முதலில் பேட்டிங் செய்த கனடா அனி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் அடுத்தடுத்து கனடா பேட்ஸ்மேன்கள் விட, நிக்கோலஸ் கிர்டனின் 49 ரன்களாலும், ஷ்ரேயாஸ் மோவாவின் 37 ரன்களாலும் 137 ரன்கள் என்ற கௌரவ ஸ்கோரை எட்டியது.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆறாவது ஓவரில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 16 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்டெர்லிங்கிற்குப் பிறகு ஆண்ட்ரூ பால்பிர்னி நான்காவது பந்தில் தவறான ஷாட் ஆடியதால் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அடுத்தடுத்து 2 விக்கெட்கள் விழ, அயர்லாந்து அணி 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
Canada's next match is against Pakistan on 11th June. 🇨🇦 pic.twitter.com/3NSLppvIci
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 7, 2024
இதன்பிறகு, கனடா பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கவே, இதன் காரணமாக அயர்லாந்தின் ரன் விகிதம் 6க்கு கீழே குறைந்தது. லோர்கன் டக்கர் (10), ஹாரி டெக்டர் (7) அற்புதமாக எதுவும் செய்யாமல் பெவிலியன் திரும்பினர். 13வது ஓவரில் கரேத் டெலானியின் வடிவத்தில் அயர்லாந்து ஆறாவது விக்கெட்டை இழந்தது. 15 ஓவர்களில் 74 ரன்கள் எடுத்திருந்த அயர்லாந்து அணி வெற்றிக்கு இன்னும் 30 பந்துகளில் 64 ரன்கள் தேவைப்பட்டது.
ஜார்ஜ் டோக்ரெல் மற்றும் மார்க் அடார் ஆகியோரின் 62 ரன் பார்ட்னர்ஷிப் அயர்லாந்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றது. கடைசி 2 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 11 ரன்கள் வந்ததால், கடைசி 6 பந்துகளில் அயர்லாந்து 17 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் ஜெர்மி கார்டன் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார், இதன் காரணமாக கனடா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CANADA HAS DEFEATED IRELAND AT THE 2024 T20 WORLD CUP. 🇨🇦 pic.twitter.com/s60zIeGBpL
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 7, 2024
டி20 உலகக் கோப்பை 2024 இல் இரண்டு நாட்களில் இது இரண்டாவது அதிர்ச்சி தரும் போட்டியாக அமைந்தது. முந்தைய போட்டியில் டல்லாஸில் நடந்த முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான், அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிக்கோலஸ் கிர்டன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குரூப் ஏ ஸ்டேஜில் யார் முன்னிலை..?
டி20 உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த கனடா 2 முக்கிய புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த வெற்றியானது குரூப் ஏ தரவரிசையில் கனடாவை மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்தியாவும் 2 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், கனடாவின் நிகர ரன்-ரேட் அதை விட குறைவாக இருப்பதால், தற்போது, நடத்தும் அமெரிக்கா 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.