Watch Video: ’இப்படி ஒரு ரன் அவுட்டா?’ - பங்களாதேஷ் ப்ரீமியர் லீகில் நடந்த சுவாரஸ்யம்
கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய குல்னா டைகர்ஸ் அணி, 19 ஓவர்களில் போட்டியை முடித்து வெற்றி கண்டது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று உலகின் வெவ்வேறு நாடுகளில் 20 ஓவர் கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை வரிசையில் வங்கதேசத்தில் பிபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், தாகா ப்ளாடூன், குல்னா டைகர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குல்னா டைகர்ஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதனை அடுத்து, தாகா ப்ளாடூன் அணி பேட்டிங் களமிறங்கியது. இந்நிலையில், போட்டியின் 15வது ஓவரை திஷாரா பெராரா வீசினார்.
ரஸல் மற்றும் மஹமதுல்லா ஆகியோர் களத்தில் இருந்தனர். ரஸல் பந்தை அடித்துவிட்டு சிங்கிள் ரன் எடுக்க முயன்றார். இதனால், ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த அவர் மறுமுனைக்கு செல்ல ஓடினார். மறுமுனையில் இருந்த மஹமதுல்லா, ஸ்ட்ரைக்கிங் எண்டை நோக்கி ஓடினார்.
வீடியோவை காண:
WHAT A BIZARRE RUN OUT! 😱
— FanCode (@FanCode) January 21, 2022
📺 Watch the #BPL2022 match live on #FanCode 👉 https://t.co/wPDmICv8cM#BPLonFanCode pic.twitter.com/O43gKKfLSi
ஃபீல்டிங்கில் இருந்த மெஹதி ஹாசன் பந்தை தூக்கி அடிக்க, ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த ஸ்டம்ப்ஸில் முதலில்பட்டு, பிட்ச்சாகி மறுமுனையில் இருந்த ஸ்டம்ப்ஸையும் தொட்டது. எனினும், முதலில் ஸ்ட்ரைக்கிங் எண்டில் பட்டபோது, மஹமதுல்லா லைனை தாண்டிச் சென்றிருந்ததால் அவர் அவுட்டாகவில்லை. மறுமுனைக்கு ஓடி கொண்டிருந்த ரஸல், லைனை தொடுவதற்குள் ஸ்டம்ஸில் பட்டதால், ரஸலுக்கு அவுட் கொடுக்கப்பட்டது.
இந்த ரன் - அவுட் வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வேளை மஹமதுல்லா எல்லையைத் தொடுவதற்குள் ஸ்டம்ஸில் பட்டிருந்தால், இது டபுள் விக்கெட்டாக இருந்திருக்குமோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து விளையாடிய தாகா ப்ளாடூன் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுதது. கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய குல்னா டைகர்ஸ் அணி, 19 ஓவர்களில் போட்டியை முடித்து வெற்றி கண்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்