Border Gavaskar Trophy:ரோஹித் ஷர்மா கேப்டன்சி வேண்டாம்..பும்ரா கிட்ட பொறுப்ப கொடுங்க!கொதித்த முன்னாள் வீரர்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணைக் கேப்டனான பும்ராவை கேப்டாக நியமிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணைக் கேப்டனான பும்ராவை கேப்டாக நியமிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி:
சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. மோசமான இந்த தோல்வி இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. அதேபோல் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் முறையில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இச்சூழலில் தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னதாக நவம்பர் 10 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆனால், இந்த பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார்.
அதோடு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெற மாட்டர் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சூழலில் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய கேப்டனை அறிவிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். அதேபோல், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாட வந்தாலும் அவரை சாதரண வீரராக மட்டுமே விளையட வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
கேப்டன் பொறுப்பை பும்ராவிடம் கொடுங்கள்:
இந்த நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "ரோஹித் ஷர்மா எப்போது இந்திய அணியுடன் இணைவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடவில்லை என்றால், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் கேப்டனாக விளையாடக் கூடாது என்று தெரிவித்திருந்தார். அதனால் துணை கேப்டனான பும்ராவை உடனடியாக கேப்டனாக அறிவிக்க வேண்டும். ஒரு கேப்டன் முதல் போட்டியில் விளையாடவில்லை என்றால், அது மிகப்பெரிய தவறு. அதனால் சுனில் கவாஸ்கர் சொல்வதில் எந்த தவறும் கிடையாது.
கடந்த முறை விராட் கோலி ஒரு போட்டியில் விளையாடிவிட்டு, அடுத்த 3 போட்டிகளில் விளையாடவில்லை. அதனை முன்கூட்டியே அனைவருக்கும் கூறியதால், ரஹானே பொறுப்புக்கு வருவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இதனால் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டான போதும், 2வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய கம்பேக்கை இந்திய அணி நிகழ்த்தியது. கேப்டன் இல்லாமல் இந்திய அணி விளையாடுவது முதல்முறையல்ல. விராட் கோலி முன்கூட்டிய ரஹானேவை தயார் செய்தார்.
ஆனால் ரோஹித் ஷர்மா தரப்பில் பும்ராவிடம் பொறுப்பை கொடுக்க தயக்கம் காட்டுகிறார். அதேபோல் தேர்வுக் குழுவும் ரோஹித் ஷர்மா விவகாரத்தில் என்ன செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை அவரால் முதல் போட்டியில் விளையாட முடிந்தால், சிக்கல் இருக்காது என்பதால் முடிவு எடுக்காமல் இருப்பதாக" தெரிவித்துள்ளார்.