T20 World Cup 2024: இனிமேதான் நீங்க கவனமா இருக்கணும்..ரோஹித் படையை எச்சரித்த பியூஷ் சாவ்லா!
கடந்த ஜூன் 2-ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
![T20 World Cup 2024: இனிமேதான் நீங்க கவனமா இருக்கணும்..ரோஹித் படையை எச்சரித்த பியூஷ் சாவ்லா! Beware of Australia and Afghanistan Piyush Chawla warns India from Super 8 rivals t20 world cup 2024 T20 World Cup 2024: இனிமேதான் நீங்க கவனமா இருக்கணும்..ரோஹித் படையை எச்சரித்த பியூஷ் சாவ்லா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/c7d56914f2df2d317df68460b337ce9a1718469506014571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பியூஷ் சாவ்லா கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தற்போதுவரை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இன்னும் மூன்று அணி எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
முன்னதாக இரண்டு குரூப்களில் விளையாடும் அணிகளுக்கு சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிற்து.
கவனமாக இருக்க வேண்டும்:
இந்நிலையில் தான் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பியூஷ் சாவ்லா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியா அணி அளவிற்கு பயங்கரமான அணி வேறு எதுவும் இல்லை. அவர்களால் எந்த அணியையும் எளிதாக வீழ்த்த முடியும்.
ஏற்கனவே இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது நமக்கு நினைவில் இருக்கும். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலேயே முகாமிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் பிட்சில் பவுலிங் செய்வதை ஆப்கானிஸ்தான் பவுலர்கள் மகிழ்ச்சியாக செய்து வருகின்றனர்.
வங்கதேச அணியை பொறுத்தவரை சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆனால் இன்னும் திறமையான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. நிச்சயம் பலமான அணி என்று வங்கதேசத்தை கருத முடியாது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆட்டங்களை சாதாரணமாக எடுக்க கூடாது. கொஞ்சம் எச்சரிக்கையுடன் தான் இந்த இரண்டு அணிகளையும் எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார் பியூஸ் சாவ்லா.
மேலும் படிக்க: T20 World Cup 2024: சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)