ICC Award : கடுமையான போட்டி! ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் விருதை வெல்லப்போவது யார்..?
ஆகஸ்ட் மாத சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை பெற பென் ஸ்டோக்ஸ், சான்ட்னர் மற்றும் சிக்கந்தர் ராசா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. ஆண்கள் பிரிவில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரரைத் தேரவு செய்வதற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர்கள் போட்டிக்கான பட்டியலுக்கு மூன்று வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
Three solid all-rounders 🏴 🇿🇼 🇳🇿
— ICC (@ICC) September 5, 2022
Nominees for the ICC Men’s Player of the Month for August 2022 are out 👇
- பென்ஸ்டோக்ஸ் :
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனும், தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவருமான பென்ஸ்டோக்ஸ் விருதுக்கான பட்டியலில் உள்ளார். அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் ஆடியதன் மூலம் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அந்த போட்டியில் பென்ஸ்டோக்ஸ் அபார சதம் அடித்ததுடன் தென்னாப்பிரிக்காவின் வான்டர்டுசென் – மார்க்ரம் கூட்டணியையும் தனது பந்துவீச்சால் பிரித்தார்.
- சிக்கந்தர் ராசா :
ஜிம்பாப்வே அணியின் முக்கிய வீரரான சிக்கந்தர் ராசா ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மூன்று சதங்களை விளாசியுள்ளார். வங்தேச அணிக்கு எதிராக அற்புதமான இரண்டு சதங்களை அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் விளாசியதுடன், இந்தியாவிற்கு எதிராக ஒரு சதத்தையும் விளாசினார். வங்கதேசத்திற்கு எதிராக அவர் அடித்த சதம் மூலம் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.
- மிட்செல் சான்ட்னர் :
நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் ஆகஸ்ட் மாதத்தில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். நியூசிலாந்து அணி ஆகஸ்ட் மாதம் பெற்ற 6 வெற்றிகளில் சான்ட்னர் முக்கிய பங்கு வகித்தார்.
இவர்கள் மூவரில் சிறந்த வீரருக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட உள்ளது.
அதேபோல, மகளிர் பிரிவிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைகளைத் தேர்வு செய்வதற்கான போட்டியாளர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : IND vs PAK: எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார்.. பாகிஸ்தானிடம் தோல்விக்கு பிறகு மனம்திறந்த விராட் கோலி
மேலும் படிக்க : IND vs PAK: பாகிஸ்தானிடம் தோல்வி... அன்று முகமது ஷமி.... இன்று அர்ஷ்தீப் சிங்.. ட்விட்டரில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..