IND vs PAK: எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார்.. பாகிஸ்தானிடம் தோல்விக்கு பிறகு மனம்திறந்த விராட் கோலி
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 ரன்கள் குவித்து தொடர்ச்சியாக 2வது அரைசதத்தை பதிவு செய்தார். இதன்காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நான் கடந்த 14 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். என்னுடைய வேலை ஒன்றே ஒன்று தான். அது சிறப்பாக விளையாடி அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பது. எனக்கு கிடைத்த ஓய்வு அதை நன்றாக புரிய வைத்துள்ளது. மீண்டும் பழைய மாதிரி என்னுடைய கிரிக்கெட்டை நான் ரசிக்க தொடங்கிவிட்டேன்.
The bond between MS Dhoni & Virat Kohli is pure gold. pic.twitter.com/g6pbSRkwp0
— Johns. (@CricCrazyJohns) September 4, 2022
என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாதம் பேட்டை தொடாமல் இருப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. எனினும் அந்த ஓய்வு எனக்கு தேவைப்பட்டது. நீங்கள் எதற்காக கிரிக்கெட் விளையாட தொடங்கினீர்களோ அதை ஒரு சில நேரங்களில் மறக்க கூடும். அதை மீண்டும் ஞாபக படுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. அதை நிச்சயம் செய்ய வேண்டும்.
நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த போது எனக்கு தோனி மட்டுமே மெசேஜ் அனுப்பினார். மற்றவர்கள் இடம் என்னுடைய நம்பர் இருந்தது. ஆனால் அவரை தவிர வேறு யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. என்னுடைய வாழ்க்கையை நான் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இது போன்ற விஷயங்கள் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று ” எனத் தெரிவித்துள்ளார்.
Virat Kohli has arrived with a bang 🔥
— A N A S 👑 (@thisisanas_) September 4, 2022
RETURN OF THE KING 👑
pic.twitter.com/TRvztSMO28
பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தோல்வி அடைந்ததுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்த 2 போட்டிகளிலும் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். இந்திய அணி அடுத்து நாளை நடைபெறும் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
சூப்பர் 4 சுற்று அட்டவணை:
செப்டம்பர் 3: ஆஃப்கானிஸ்தான்-இலங்கை
செப்டம்பர் 4: இந்தியா-பாகிஸ்தான்
செப்டம்பர் 6: இந்தியா-இலங்கை
செப்டம்பர் 7: பாகிஸ்தான்-ஆஃப்கானிஸ்தான்
செப்டம்பர் 8: இந்தியா-ஆஃப்கானிஸ்தான்
செப்டம்பர் 9: இலங்கை-பாகிஸ்தான்
செப்டம்பர் 11: இறுதிப் போட்டி சூப்பர் 4 முதலிடம்- இரண்டாம் இடம் பிடித்த அணிகள்
அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மோதும். ஆசிய கோப்பை தொடரில் நடப்புச் சாம்பியனான இந்திய அணி இம்முறையும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.