ENG vs AUS: விஸ்வரூபம் எடுக்கும் பேர்ஸ்டோவ் விக்கெட்.. பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்த நாளிதழ்.. என்ன நடக்கிறது..?
ஆஸ்திரேலிய நாளிதழான தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் தனது பேப்பரின் முதல் பக்கத்தில் பென் ஸ்டோக்ஸை வாயில் நிபிள் வைத்தது போன்று சித்தரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்க செய்த விதம்தான் இன்றளவு பெரிய பேச்சு பொருளாகி வந்துள்ளது. இந்த மாதிரியான செயல்கள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு சரியானது அல்ல என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை ஆங்கில ஊடக நிறுவனங்கள் குறிவைத்து கிண்டல் செய்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை ஆஸ்திரேலிய ஊடகக்கள் குறிவைத்து தாக்கி வருகின்றன. ஸ்டோக்ஸின் உருவத்தை சிறுபிள்ளை போல் பாவித்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய நாளிதழான தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் தனது பேப்பரின் முதல் பக்கத்தில் பென் ஸ்டோக்ஸை வாயில் நிபிள் வைத்தது போலவும், அழும் குழைந்தையாக இருப்பது போன்று சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் குறித்து ஸ்டோக்ஸ் ட்வீட் செய்து, அது நானாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
That’s definitely not me, since when did I bowl with the new ball https://t.co/24wI5GzohD
— Ben Stokes (@benstokes38) July 3, 2023
இந்தப் புகைப்படத்தின் பின்னணியில் பென் ஸ்டோக்ஸ் போட்டிக்குப் பிறகு ஜானி பேர்ஸ்டோவை அவரது விக்கெட்டுக்காக விமர்சித்ததே காரணம். அப்போது பீல்டிங் அணியின் கேப்டனாக இருந்திருந்தால் மேல்முறையீட்டை வாபஸ் பெற்றிருப்பேன் என்று ஸ்டோக்ஸ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டான பேரிஸ்டோவ்:
Once a cheater, always a cheater. Johny bairstow clearly leaved that ball then how could Australia even appeal run out ??. #Ashes23 #ENGvsAUS #AUSvsENGpic.twitter.com/sodRbHD5XY
— Ritika Malhotra 🇮🇳 (@FanGirlRohit45) July 2, 2023
ஒவ்வொரு பந்துக்கு ஒரு முறை வெளியேறிய பேரிஸ்டோவ்:
Best video I have seen of the routine Bairstow has after leaving a delivery.
— Grant Elliott (@grantelliottnz) July 3, 2023
Hmmmm I know what I would have done as captain. Thoughts? #AUSvsENG pic.twitter.com/QTnoLWRHIQ
இங்கிலாந்து வீரர் பேரிஸ்டோவ் தான் சந்தித்த ஒவ்வொரு பந்துக்கு ஒருமுறை நடந்து வெளியேறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட சிலமுறை மட்டுமே வார்னிங் கொடுக்கப்படும். மீண்டும் மீண்டும் அதை செய்தால் யாராக இருந்தாலும் பேரிஸ்டோவை அவுட்தான் செய்திருப்பார்கள் என நெட்டிசன்கள் ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.