ICC Mens Cricket Committee: இனி கும்ளேவுக்குப் பதில் கங்குலி - ஐசிசியில் முக்கிய பொறுப்பை கைப்பற்றிய தாதா!
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக முன்னாள் இந்திய அணி வீரர் கும்ளே இருந்த நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்ததையடுத்து கங்குலி அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருக்கும் சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு முதல், ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக முன்னாள் இந்திய அணி வீரர் கும்ளே இருந்த நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்ததையடுத்து கங்குலி அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான முக்கிய விதிமுறைகள் மற்றும் முடிவுகளை எடுக்கும் ஐசிசி குழுவில் இப்போது கங்குலி இடம் பிடித்திருக்கிறார். இது குறித்து பேசிய ஐசிசி தலைவர் கிரேக் பார்க்ளே, “கங்குலியை ஐசிசி வரவேற்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய அனில் கும்ப்ளேவின் பங்களிப்பு ஐசிசிக்கு மிக உதவியாக இருந்தது.” என தெரிவித்துள்ளார்.
🚨 Key decisions taken by ICC Board 🚨
— Cricbuzz (@cricbuzz) November 17, 2021
*⃣ Working Group formed to review cricket in AFG
*⃣ No changes to WTC format
*⃣ Top 10 teams to gain automatic entry for 2027 WC
Full story ⏬⏬
கடந்த காலங்களில் ஐசிசி எடுத்த முக்கிய முடிவுகளில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மீதான தனி கவனம் பாராட்டுக்களை பெற்றது. அதுமட்டுமின்றி, மகளிர் கிரிக்கெட்டுக்கும் முக்கியத்தவம் தந்து சில தொடர்களை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கங்குலி இப்போது ஐசிசியின் கிரிக்கெட் குழுவில் இணைந்திருப்பதால், மேலும் சில முன்னேற்றங்கள் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான ஃபார்மெட் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் கடைபிடிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் 9 அணிகள் மோதும் இத்தொடரில், டாப் இரண்டில் இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்