மேலும் அறிய

small savings: 2025ம் ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..! சிறுசேமிப்பு திட்டங்கள், எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி? - மத்திய அரசு

Small Savings Interest: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Small Savings Interest: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில், நிதியாணின் கடைசி காலாண்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

ஜனவரி 1, 2025 முதல் தொடர்ந்து மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய யுள்ள, 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டிலும்,  பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களிலும் எந்தவிதமான மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனவரி-மார்ச் 2025 காலகட்டத்திற்கான சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் முந்தைய காலாண்டில் இருந்ததைப் போலவே இருக்கும் என்று நிதி அமைச்சக அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைக்கு 8.2% வட்டி தொடர்ந்து கிடைக்கும்.

ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க சில திட்டங்களுக்கு புத்தாண்டில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மூன்று ஆண்டு கால வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1% ஆக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வைத்திருப்பவர்கள் 7.1% மற்றும் தபால் அலுவலக சேமிப்பு வைப்பு கணக்குகள் 4% வட்டி பெறுவார்கள். கிசான் விகாஸ் பத்ரா வட்டி விகிதம் 7.5% ஆக உள்ளது, முதலீடுகள் 115 மாதங்களில் முதிர்ச்சியடையும். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) 7.7% வழங்கும், மாதாந்திர வருமானத் திட்டம் 7.4% இல் தொடர்கிறது. கடந்த மூன்று காலாண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் உள்ளது. முந்தைய நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அரசாங்கம் அதன் மிக சமீபத்திய மாற்றங்களைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!

எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம்?

  • தபால் அலுவலக சேமிப்பு கணக்கு 4%
  • தபால் அலுவலகம் தொடர் வைப்பு 6.7%
  • தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் 7.4%
  • தபால் அலுவலக நேர வைப்பு (1 வருடம்) 6.9%
  • தபால் அலுவலக நேர வைப்பு (2 ஆண்டுகள்) 7%
  • அஞ்சல் அலுவலக நேர வைப்பு (3 ஆண்டுகள்) 7.1%
  • அஞ்சல் அலுவலக நேர வைப்பு (5 ஆண்டுகள்) 7.5%
  • கிசான் விகாஸ் பத்ரா (KVP) 7.5%
  • பொது வருங்கால வைப்பு நிதி (PPF) 7.1%
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா 8.2%
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ் 7.7%
  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) 8.2%

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் என்பது, ஜனவரி 1ம் தேதி தொடங்கி, மார்ச் 31ம் தேதி வரைக்கும் மட்டுமே பொருந்தும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget