Ranji Trophy : ரஞ்சி கோப்பை போட்டிகள் இரு கட்டங்களாக நடத்தப்படும் : பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா
ரஞ்சி கோப்பை போட்டிகள் இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இந்த மாதம் நடைபெற இருந்த முதன்மையான முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி 2021-22 ம் ஆண்டு தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதேபோல், 2021-22 சீசனுக்கான கர்னல் சி கே நாயுடு டிராபி மற்றும் சீனியர் மகளிர் டி20 லீக் ஆகிய தொடர்களுக்கு தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா இன்று (வெள்ளிக்கிழமை) ரஞ்சி கோப்பை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த சீசனில் ரஞ்சி டிராபி இரண்டு கட்டங்களாக நடைபெறும், இதில் அனைத்து லீக்-நிலை ஆட்டங்களும் முதல் கட்டமாக நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டமாக ஜூன் மாதம் நாக் அவுட்கள் சுற்றுகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடந்த பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் "இந்த சீசனில் ரஞ்சி டிராபியை இரண்டு கட்டங்களாக நடத்த வாரியம் முடிவு செய்யப்பட்டது என்றார்.
அதே நேரத்தில், லீக் கட்டத்தின் அனைத்து போட்டிகளையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ரஞ்சி டிராபி என்பது எங்களின் மிகவும் மதிப்புமிக்க உள்நாட்டுப் போட்டியாகும், இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் தங்களது திறமைகளை இந்த தொடரின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த முதன்மை தொடரில் பங்கேற்கும் வீரர்களைபாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனிலும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ரஞ்சி டிராபி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மார்ச் மாத இறுதியில் தொடங்கி, மே மாதத்தில் போட்டிகள் முடிவடையும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, ரஞ்சி டிராபி 201-22 சீசன் ஜனவரி 13 ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது. கொரோனா, ஒமிக்ரான் மாறுபாடு காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்திவைத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பக்கத்து வீட்டு பெண்களை ஆபாசமாக படம் எடுத்த கணவர்...போலீஸில் போட்டுகொடுத்து பாடம் எடுத்த மனைவி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்