(Source: ECI/ABP News/ABP Majha)
ICC Chairperson Jay Shah: ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
ICC Chairperson Jay Shah: ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெருமையை பெற்றுள்ளார் .
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ( ஐசிசி ) ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 1ல், பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே தான் ஐசிசி தலைவர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவருடைய பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் குறித்தான பதவிக்கு பிசிசிஐ செயலாளராக பணியாற்றி வரும் ஜெய்ஷா விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக அவர் அடுத்த மூன்று ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
BCCI Secretary Jay Shah has been elected unopposed as the next Independent Chair of the International Cricket Council (ICC). He will assume this role on December 1, 2024: ICC pic.twitter.com/W3ca8MMAYw
— ANI (@ANI) August 27, 2024
கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா ஐ.சி.சி தேர்தலில் போட்டியிட்டால் பிசிசிஐ செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அடுத்த ஐசிசி தலைவராக பதவியேற்றவுடன், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி பிசிசிஐ செயலாளர் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகிறது.
Rohan Jaitley likely to become the new secretary of the BCCI if Jay Shah is elected as the ICC Chairman. (Dainik Bhaskar). pic.twitter.com/3zttXNmKfa
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 26, 2024