BCCI Prize Money: இந்திய வீரர்களுக்கு ஷாக் கொடுத்த பிசிசிஐ - ஐசிசி கோப்பைகளும், கோடிகளில் பரிசுகளும்..!
BCCI Prize Money: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஐசிசி கோப்பைகளை வென்றபோது, இதுவரை பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.
BCCI Prize Money: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றதற்ககாக, பிசிசிஐ 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது.
பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை:
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில், தென்னாப்ரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அண் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 11 ஆண்டுகளாக எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்ற, இந்திய ரசிகர்களின் ஏக்கத்தை ரோகித் சர்மா தலைமையிலான அணி போக்கியது. முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தான், இந்திய அணி வென்ற ஐசிசி போட்டியாகும். இதையடுத்து இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் வகையிலும், வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், இந்திய அணி மற்றும் அதன் ஆதரவு ஊழியர்களுக்கு ஒரு பெரிய வெகுமதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதன்படி, மொத்தமாக 125 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது.
பிசிசிஐ முன்பு அளித்த பரிசுகள் என்ன?
டி20 உலகக் கோப்பை 2024 வெற்றிக்கான பிசிசிஐயின் வெகுமதி, எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் கிடைத்த முந்தைய ஐசிசி வெற்றிகளுக்கான பரிசுத்தொகையுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சொற்பமாகவே உள்ளது.
- 2013ஆம் ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது. மேலும், தலைமை பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசாக வழங்கப்படது.
- 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, தலா ரூ. 1 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பரிசு தொகை பின்னர் தலா ரூ. 2 கோடியாக மாற்றப்பட்டது. துணை ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வெகுமதியாக வழங்கப்பட்டது.
- கடந்த 2007ம் ஆண்டில் நடந்த முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. இதனை பாராட்டும் விதமாக ஒட்டுமொத்த அணிக்கும் 12 கோடி ரூபாய் சன்மானமாக வழங்கப்பட்டது.
T20 உலகக் கோப்பை 2024 பரிசுத் தொகை எவ்வாறு விநியோகிக்கப்படும்?
பரிசுத்தொகை பகிர்வு தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் உள்ள 15 உறுப்பினர்களுக்கும் தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பட்டியலில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் உள்ளனர். மாற்று வீரர்களாக இருந்த 4 பேருக்கு தலா ரூ.2.5 கோடி வழங்கப்படுகிறது. தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடியும், பயிற்சியாளர் பிரிவில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு தலா ரூ. 1 கோடி. பிசியோஸ், த்ரோ டவுன் நிபுணர்கள் தலா ரூ.2 கோடியும், தேர்வாளர்கள் தலா ரூ.1 கோடியும் பரிசாக பெற உள்ளனர்.