(Source: Poll of Polls)
BCCI President: இதை யாருமே எதிர்பார்க்கலை.. கோலி குறித்து பேசிய பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி
கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பேசினார்.
கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது..
இது எனக்கு கனவு போன்று உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அப்படியொரு ஆட்டத்தை விளையாடினார். இதுபோன்ற ஒரு ஆட்டத்தை எப்போதாவது ஒரு முறை தான் பார்க்க முடியும். பாகிஸ்தான் தான் வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் இந்தியா வெற்றி பெற்றது. இதைதான் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களும் பார்க்க விரும்பினர் என்றார் ரோஜர் பின்னி.
டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு பிரிவில் மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தாகி உள்ளன. இதன்காரணமாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 15 ரன்களில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் 9 ரன்களுக்குநிகிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்து சிறப்பாக தொடங்கினார். எனினும் யாவரும் நிகிடி பந்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார். எனினும் இந்தப் போட்டியில் 11 ரன்கள் எடுத்திருந்த போது டி20 உலகக் கோப்பை தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் இந்தியா வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இவர் தற்போது வரை 22 இன்னிங்ஸில் விளையாடி 1001 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக இலங்கை அணியின் மகேலா ஜெயவர்தனே 1000 ரன்களை கடந்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்தியா-நெதர்லாந்து இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்களைக் குவித்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து விளையாடவுள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் 9 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.
பின்னர், கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினர். ரோகித் சர்மா 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் விளாசினார்.
முன்னாள் கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அருமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்களில் 179 ரன்களை குவித்தது.