Sachin BCCI | இந்திய அணியில் மீண்டும் மாஸ்டர் பிளாஸ்டர்... புதிய பதவிக்கு பிசிசிஐ அழைப்பு.. இது சச்சினின் உழைப்பு!
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி ரவி சாஸ்திரி பயிற்சியில், விராட் கோலி தலைமையின் கீழ் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்தது. மேலும், இந்திய அணியை வலுபடுத்தும் விதமாக பிசிசிஐ 'தி வால்' என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டை, ரவி சாஸ்திரி ஓய்வுக்கு பிறகு பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு தலைமை பயிற்சியாளராக களமிறக்கியது.
மேலும், பிசிசிஐ தலைவராக கங்குலி ஏற்கனவே பதவி வகித்து வருகிறார். தொடர்ந்து, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், இந்திய அணிக்கு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பதவியில் இருந்து தொடர்ந்து விலகி இருந்து வந்த சச்சின் டெண்டுல்கருக்கு முக்கிய பதவி அளிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இந்திய அணியில் ஏற்கனவே தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர் என தனித்தனி பயிற்சியாளர்கள் இருந்தாலும், வீரர்களுக்கு ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
shot by @sachin_rt sir.❤ pic.twitter.com/uoxmp9BsG7
— Sudhir Kumar Chaudhary (@Sudhirsachinfan) January 4, 2022
விராட் கோலி, புஜாரா, ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் கடந்த சில நாட்களாக ரன் எடுக்க திணறி வருகின்றனர். இவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், பேட்டிங்கில் எப்படி சிறப்பான ஆட்டங்களை வெளிபடுத்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் இந்த பதவியின் மூலம் ஆலோசனை வழங்கலாம்.
கடந்த டி 20 உலககோப்பையின்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஆலோசகராக செயல்பட்டாரோ அதேபோல், வரும் காலங்களில் இந்திய அணிக்கு முழுநேர ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் பதவி வகிக்க இருக்கிறார்.
இதுவரை சச்சின், சர்வதேச அளவில் 100 சதங்கள் உள்பட 34,000 க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். இவரது சாதனையை முறியடிக்க இன்னும் ஒரு சச்சின் டெண்டுல்கர் பிறந்து தான் வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்திய அணி விளையாடினாலும் மைதானத்தில் சச்சின், சச்சின் என்ற முழக்கம் காதை கிழிக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்