"உலகின் தலை சிறந்த வீரர் பாபர் அசாம்… பாகிஸ்தான் வலிமையான அணி" - கேன் வில்லியம்சன் புகழாரம்!
இவ்வளவு வளமான கிரிக்கெட் வரலாறு கொண்ட நாட்டில், பல நம்பமுடியாத போட்டிகள் நடந்துள்ளன, அந்த அனுபவத்தை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றும் வில்லியம்சன் தெரிவித்தார்.
2022 மற்றும் 2023ல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்காக நியூசிலாந்து இரண்டு கட்டங்களாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்திற்கு செல்வது குறித்து, கேப்டன் கேன் வில்லியம்சன் மிகவும் உற்சாகமாக உள்ளார். பாகிஸ்தான் தோற்கடிக்க கடினமான அணி என்று அவர் கூறியுள்ளார்.
வில்லியம்சனின் எதிர்பார்ப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ள விடியோவில் பேசும் கேன் வில்லியம்சன், பாக்கிஸ்தானுடனான போட்டியில் சிறந்த அனுபவங்களை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார். பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இவ்வளவு வளமான கிரிக்கெட் வரலாறு கொண்ட நாட்டில், பல நம்பமுடியாத போட்டிகள் நடந்துள்ளன, அந்த அனுபவத்தை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றும் வில்லியம்சன் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
💬 "Pretty special to play back in Pakistan"
— Pakistan Cricket (@TheRealPCB) October 10, 2022
New Zealand captain Kane Williamson expresses excitement at his team's upcoming tours of Pakistan 👍
Full schedule ➡️ https://t.co/WUkV3M4ITC#PAKvNZ pic.twitter.com/zndmnQOICt
மீண்டும் பாகிஸ்தானில் போட்டிகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வீடியோவை ட்வீட் செய்த போது அதோடு ஒரு கேப்ஷனையும் சேர்த்திருந்தது. “பாகிஸ்தானில் மீண்டும் விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தனது அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணங்கள் குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்", என்று எழுதி இருந்தனர். அந்த விடியோவில், "பாகிஸ்தான் அனைத்து வடிவங்களிலும் வலிமையான அணியாகும், எனவே இது ஒரு கடினமான பணி என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் இதனை ஒரு சவாலாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
பாபர் அசாம் தலைசிறந்தவர்
மேலும், வில்லியம்சன் பாபர் ஆசாமைப் புகழ்ந்து அவரை உலகின் தலைசிறந்தவர் என்று அழைத்தார். "ஒரு அணியாக அவர்கள் எப்போதும் சமநிலையுடன் இருப்பார்கள். அவர்கள் நிறைய வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளனர் மற்றும் அனைத்திற்கும் ஏற்ற பேட்டிங்கைக் கொண்டுள்ளனர். அவர்களின் கேப்டன் பாபர் அசாம் உலகின் முதல் இடத்தில் உள்ளார்" என்று வில்லியம்சன் கூறினார்.
போட்டி விபரங்கள்
இந்த தொடர் இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கும். டிசம்பர் 23 முதல் ஜனவரி 15 வரை, நியூசிலாந்து அணி கராச்சி மற்றும் முல்தானில் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மேலும், அவர்கள் ஏப்ரல் 13 முதல் மே 5 வரை கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் பல டி20 ஐ விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு மீண்டும் வருவார்கள். நியூசிலாந்தின் சுற்றுப்பயணம் பாகிஸ்தானுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும், ஏனெனில் அவர்கள் சமீபத்தில் இங்கிலாந்துடன் ஏழு டி20 போட்டிகளை நேஷனல் ஸ்டேடியம் மற்றும் கடாபி ஸ்டேடியத்தில் நடத்தினார்கள். இருப்பினும், அவர்கள் அந்த தொடரை இங்கிலாந்திடம் இழந்தனர், ஆனால் அந்த நிகழ்வை நடத்துவதன் மூலம் அதிகமான அணிகள் தங்கள் சொந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கான பாதையைத் திறந்திருக்கும் என்று நம்புகின்றனர். தற்போது, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, வங்கதேசம் பங்கேற்கும் டி20 முத்தரப்பு தொடரில் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.