Watch Video: சிராஜை சீண்டிய ஆஸ்திரேலியர்கள்! ஹெட்டால் வந்த பஞ்சாயத்து.. பதிலடி கொடுத்த கவாஸ்கர்
Ind vs Aus 2024: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை நோக்கி ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்டனர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை நோக்கி ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சலிட்ட நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்
பிரிஸ்பேன் டெஸ்ட்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹர்ஷித் ராணா மற்றும் ஆர் அஷ்வின் பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் சேர்க்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, காயத்தில் இருந்து மீண்ட ஜோஷ் ஹேசில்வுட் , ஸ்காட் போலண்டிற்குப் பதிலாக அணிக்கு திரும்பினார் .
இதையும் படிங்க: Ind vs Aus : அலாரம் வச்சுக்கோங்க! பிரிஸ்பெனில் தொடங்கும் 3வது டெஸ்ட்! ஆஸிக்கு பதிலடி தருமா இந்தியா..
கூச்சலிட்ட ரசிகர்கள்:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று பந்துவீச வந்த போத்ய் கூட்டத்தின் ஒரு பகுதியினரால் கடுமையாகக் கூச்சலிட்டார். ஆஸ்திரேலிய இன்னிங்ஸின், இரண்டாவது ஓவரை சிராஜ் வீசத் தயாரானதும், மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிராஜூக்கு எதிராக கூச்சல் முழங்கியது.
Big boo for siraj from the crowd#AUSvIND #TheGabba pic.twitter.com/rQp5ekoIak
— ٭𝙉𝙄𝙏𝙄𝙎𝙃٭ (@nitiszhhhh) December 14, 2024
ஹெட்டுடன் மோதல்:
அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட்டிற்கு நடந்த சர்ச்சையின் காரணமாக இந்த எதிர்வினை ஏற்பட்டது என்று கூறலாம், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ்சில் சிராஜூக்கும் டிராவில் ஹெட்டுக்கும் வார்த்தை மோதல் இருந்து கொண்டே இருந்தது. அந்த போட்டியில் டிராவிஸ் 140 ரன்கள் விளாசினார், இறுதியில் சிராஜின் பந்து வீச்சில் ஆட்ட்மிழந்து வெளியேறினார். அப்போது இருவருக்கும் பயங்கர வாய் தகராறு ஏற்ப்பட்டது.
DSP siraj arrested India's biggest cricket criminal Travis head. #INDvsAUS pic.twitter.com/a8U8Xr9gDh
— Prayag (@theprayagtiwari) December 7, 2024
சிராஜ் மற்றும் ஹெட் இருவரும் சர்ச்சையில் சிக்கியதற்காக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜூக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஹெட்டுக்கு போட்டியில் ஒரு டிமெரிட் புள்ளியானது குறைக்கப்பட்டது.
கவாஸ்கர் ஆதரவு:
ஆஸ்திரேலிட ரசிகர்களின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் பேசுகையில்"ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் உள்ள அனைத்து "புனிதர்களிடமிருந்தும்" சிராஜ் அடியை பெறுகிறார், நிச்சயமாக, அவர்கள் களத்தில் தங்கள் பாவம் செய்யாத நடத்தைக்கு பெயர் பெற்றவர்கள். ஹெட் மீது சிராஜின் அனல் பறக்கும் ஆட்டம் என்பது ஆஸ்திரேலிய ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கலாம்.” என்றார்.
ஆனால், அடுத்த கோடை ஆஷஸ் தொடரின் போது, ஆஸி., வேகப்பந்து வீச்சாளர் ஒரு இங்கிலாந்து வீரரை இதே போல் அனுப்பினால், அதே மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஒரு காலத்தில் மாங்கிரல்களாக ( ஒரு வகை கலப்பின விலங்கு) மாற வேண்டும் என்று ஊடகங்களில் சில பரிந்துரைகள் வந்தன. அப்படி வந்தாலும் குரைக்க மட்டும் தான் செய்வார்கள் என்று சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்திருந்தனர்.