குகேஷ் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்பட்டம் வென்று சாதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தார். 14வது சுற்றில் டிங் லிரனை வீழ்த்தினார் குகேஷ் இதற்கு முன்பு கேரி காஸ்பரோவ் இளம் வயது சாம்பியன் என்ற சாதனையை வைத்திருந்தார். 18 வயதிலே இந்த பட்டத்தை வென்று இளம் சாம்பியன் ஆனார். செஸ் விளையாடத் தொடங்கியது முதலே இந்த தருணத்திற்காக காத்திருந்தேன் என்றார் குகேஷ். போட்டியில் வெற்றி பெற்ற பின்பு கண்ணீர் மல்க தனது அப்பாவை கட்டி அணைத்தார் குகேஷ் விஸ்வநாத் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற 2வது தமிழக வீரர் இந்த வெற்றியின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் தமிழக வீரர் குகேஷ்.