ODI World Cup 2023: இந்தியா பாகிஸ்தான் கட்டாயம் அரையிறுதியில் விளையாடும் - ஆடம் கில்கிரிஸ்ட் ஓபன் டாக்
ODI World Cup 2023: கில்கிரிஸ்ட்டின் கருத்துப்படி இம்முறையும் ஏற்கனவே கோப்பையை வென்ற அணிகள்தான் கோப்பையை வெல்லும் என்பது தெரிகிறது.
ODI World Cup 2023: உலகக்கோப்பைத் திருவிழா துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. வரும் 25ஆம் தேதி முதல் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிகள் தொடங்கவுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் இந்த உலகக்கோப்பை நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்காக இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் 10 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மைதானத்திற்கும் தலா ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்து மைதானங்களின் உட்கட்டமைப்பையும் தரத்தையும் மேம்படுத்தி வருகிறது. இந்த 10 மைதானங்களில் பெரும்பாலான மைதானங்கள், அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், மும்பை வான்கடே மைதானம், பெங்களூரூ சின்னச்சாமி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், புனேவில் உள்ள எம்.சி.ஏ மைதானம், டெல்லியில் அருண் ஜெட்லீ மைதானம், லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானம், தர்மசாலாவில் உள்ள HPCA மைதானம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானம் என மொத்தம் 10 மைதானங்களில் உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உலகக்கோப்பைத் தொடருக்கான ப்ரோமோஷன் பணிகளை ஏற்கன்வே செய்துவந்தாலும் தற்போது மிகவும் வேகப்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் ஜாம்பவான்களை இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து, அவர்களின் கருத்தைக் கேட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நடத்திய விவாத நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் இந்த ஆண்டுக்கான உலகக்கோபைத் தொடரில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளார்.
அதில் தொடரை நடத்தும் இந்தியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளார். கில்கிரிஸ்ட்டின் கருத்துப்படி இம்முறையும் ஏற்கனவே கோப்பையை வென்ற அணிகள்தான் கோப்பையை வெல்லும் என்பது தெரிகிறது.
உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் ரவூப், முகமது வாசிம் ஜூனியர், முகமது நசீம் ஷா மற்றும் ஷாஹீன் அப்ரிடி.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன் , சூர்யகுமார் யாதவ்.
ஆஸ்திரேலியா உலகக் கோப்பை அணி
பாட் கம்மின்ஸ் (கேப்டன் ), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்.
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் .