Asian Games 2023 Cricket Schedule: ருதுராஜ், ஹர்மன்ப்ரீத் தலைமையில் களம்.. எந்தெந்த நாட்களில் இந்திய போட்டிகள்.. வெளியான முழு விவரம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் நேரடியாக காலிறுதி போட்டியில் செப்டம்பர் 22 ம் தேதி விளையாடுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023க்கான பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை இந்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. கிரிக்கெட் போட்டியானது செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 7 வரை நடைபெறுகிறது.
கிரிக்கெட் போட்டி:
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆண்கள் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்குகிறது. அதேபோல், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணியும் களமிறங்குகிறது. மகளிர் போட்டிகளானது செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ம் தேதி வரையிலும், ஆண்களுக்கான போட்டிகளானது செப்டம்பர் 28ம் தேதி தொடங்கி அக்டோபர் 7ம் தேதி வரையிலும் மோத இருக்கின்றனர்.
நேரடியாக காலிறுதி:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் நேரடியாக காலிறுதி போட்டியில் செப்டம்பர் 22 ம் தேதி விளையாடுகிறது. அதேபோல், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணி அக்டோபர் 5ம் தேதி நேரடியாக காலிறுதியில் விளையாடுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான கிரிக்கெட் அட்டவணையை கீழே பார்க்கலாம்..
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் அட்டவணை:
தேதி | நேரம் | போட்டி எண். | மோதல் | சுற்று |
---|---|---|---|---|
19/9/2023 செவ்வாய்கிழமை | 9:30 | 1 | ஹாங்காங் vs சீனா | சுற்று 1 |
14:30 | 2 | நேபாளம் vs சிங்கப்பூர் | சுற்று 1 | |
20/9/2023 புதன்கிழமை | 9:30 | 3 | இந்தோனேசியா vs மலேசியா | சுற்று 1 |
14:30 | 4 | போட்டி 1 வெற்றியாளர் vs மேட்ச் 2 வெற்றியாளர் | சுற்று 1 | |
21/9/2023 வியாழன் | 9:30 | 5 | UAE vs பூடான் | சுற்று 1 |
14:30 | 6 | தாய்லாந்து vs ஓமன் | சுற்று 1 | |
22/9/2023 வெள்ளிக்கிழமை | 9:30 | 7 | இந்தியா vs மேட்ச் 4 வெற்றியாளர் | QF1 |
14:30 | 8 | பாகிஸ்தான் vs போட்டியின் வெற்றியாளர் 3 | QF2 | |
23/9/2023 சனிக்கிழமை | தொடக்க விழா (ஓய்வு நாள்) | |||
24/9/2023 ஞாயிறு | 9:30 | 9 | போட்டியின் 3வது VS வெற்றியாளர் 4 | QF3 |
14:30 | 10 | போட்டியின் 4வது VS வெற்றியாளர் 5 | QF4 | |
25/9/2023 திங்கட்கிழமை | 9:30 | 11 | QF1&QF2 வெற்றியாளர் | SF1 |
14:30 | 12 | QF3&QF4 வெற்றியாளர் | SF2 | |
26/9/2023 செவ்வாய்கிழமை | 9:30 | 13 | SF1&SF2 இழந்தவர் | 3/4 |
14:30 | 14 | SF1&SF2 வெற்றியாளர் | ஃபைனல் |
ஆசிய விளையாட்டு ஆண்கள் கிரிக்கெட் அட்டவணை:
தேதி | நேரம் | போட்டி எண். | குழு | மோதல் | சுற்று |
---|---|---|---|---|---|
28/9/2023 வியாழன் |
9:00 | 1 | ஓமன் vs சவுதி அரேபியா | 1 | |
14:00 | 2 | ஹாங்காங் vs சிங்கப்பூர் | 1 | ||
29/9/2023 வெள்ளிக்கிழமை |
9:00 | 3 | மலேசியா vs பஹ்ரைன் | 1 | |
14:00 | 4 | நேபாளம் vs இந்தோனேசியா | 1 | ||
30/9/2023 சனிக்கிழமை |
9:00 | 5 | கத்தார் vs குவைத் | 1 | |
14:00 | 6 | UAE vs பூடான் | 1 | ||
1/10/2023 ஞாயிறு |
9:00 | 7 | ஆப்கானிஸ்தான் vs சீனா | 2 | |
14:00 | 8 | போட்டி 1 வெற்றியாளர் vs மேட்ச் 2 வெற்றியாளர் | 2 | ||
2/10/2023 திங்கட்கிழமை |
9:00 | 9 | போட்டியின் 3 வெற்றியாளர் vs போட்டியின் வெற்றியாளர் 4 | 2 | |
14:00 | 10 | போட்டி 5 வெற்றியாளர் vs போட்டி 6 வெற்றியாளர் | 2 | ||
4/10/2023 புதன்கிழமை |
9:00 | 11 | QF1 | பாகிஸ்தான் vs போட்டியின் வெற்றியாளர் 8 | QF |
14:00 | 12 | QF2 | இலங்கை vs போட்டியின் வெற்றியாளர் 9 | QF | |
5/10/2023 வியாழன் |
9:00 | 13 | QF3 | பங்களாதேஷ் vs போட்டியின் 10 வெற்றியாளர் | QF |
14:00 | 14 | QF4 | இந்தியா vs மேட்ச் 7 வெற்றியாளர் | QF | |
6/10/2023 வெள்ளிக்கிழமை |
9:00 | 15 | SF1 | வெற்றியாளர் QF1 vs வெற்றியாளர் QF4 | எஸ் எப் |
14:00 | 16 | SF2 | வெற்றியாளர் QF2 vs வெற்றியாளர் QF3 | எஸ் எப் | |
7/10/2023 சனிக்கிழமை |
9:00 | 17 | வெண்கலம் | லூசர் SF1 vs லூசர் SF2 | 3/4 |
14:00 | 18 | தங்கம் | வெற்றியாளர் SF1 vs வெற்றியாளர் SF2 | ஃபைனல் |
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய (சீனியர் பெண்கள்) அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, டைட்டாஸ் சாது, ராஜேஸ்வரி கயக்வாட், மின்னு மணி, கனிகா செதுஜா, உமா செதுஜா (விக்கெட் கீப்பர்), அனுஷா பாரெட்டி
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய (சீனியர் ஆண்கள்) அணி
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)
காத்திருப்பு வீரர்களின் பட்டியல் : யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன்.