மேலும் அறிய

Asia Cup 2023 SL VS BAN LIVE: வங்காள தேசத்தை புரட்டி எடுத்த இலங்கை; 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

Asia Cup 2023 SL VS BAN LIVE: ஆசிய கோப்பை தொடரில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.

LIVE

Key Events
Asia Cup 2023 SL VS BAN LIVE: வங்காள தேசத்தை புரட்டி எடுத்த இலங்கை; 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

Background

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஆசியக்கோப்பை கிரிக்கெட்:

ஐசிசி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நேற்று தொடங்கியது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்ற்றுள்ளன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை வரலாற்றில் இந்த தொடரில் நேபாளம் அணி முதல் முறையாக அறிமுகமாகியது. 

இலங்கை - வங்கதேசம் மோதல்:

தொடரின் முதல் போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து, இன்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன. இலங்கையில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. போட்டியின் நேரலையை  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும்,  ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

தடுமாறும் இலங்கை:

தொடருக்கான அணியே வெறும் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டது. காரணம் அந்த அணியின் முக்கிய வீரர்களான வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, தில்ஷான் மதுஷங்கா மற்றும் லகிரு குமரா ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குஷால் பெரேரா முழுமையாக குணமடையாததால் அவரும் அணியில் இடம் பெறவில்லை. இதனால், போதிய அனுபவம் இல்லாத வீரர்களுடன் தான் இலங்கை அணி தொடரில் களமிறங்கியுள்ளது.


மீண்டு வருமா இலங்கை?

இந்தியாவுக்கு எதிராகவும், நியூசிலாந்திற்கு எதிராகவும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி , நடப்பாண்டில் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை மட்டுமே கைப்பற்றியது. அணியின் பேட்டிங் பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, ஷாரித் அசலங்கா ஆகியோரை பெரிதும் சார்ந்து உள்ளது. பந்துவீச்சில் மகேஷ் தீக் ஷனா, கசன் ரஜிதாஆகிய இளம் வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. கேப்டன் தசன் ஷனகாவும் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேநேரம், போட்டி உள்ளூரில் நடைபெறுவது இலங்கை அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.


வங்கதேச அணி:

பொதுவாக உள்ளூரில் சிறப்பாக விளையாடும் வங்கதேச அணி, நடப்பாண்டில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் வங்கதேச அணியிலும் லிட்டன் தாஸ் உள்ளிட்ட சில நட்சத்திர வீரர்களும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். கேப்டன் ஷகிப் அல்ஹசன், முஸ்பிகுர் ரகிம், நஜ்முல் ஷான்டோ ஆகியோர் பேட்டிங்கிலும், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் டஸ்கின் அகமது ஆகியோர் பந்துவீச்சிலும் பலம் சேர்க்கக்கூடும். இதனால், இன்றைய போட்டியில் வெற்றிக்காக இலங்கை மற்றும் வங்கதேச அணியிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22:15 PM (IST)  •  31 Aug 2023

வங்காள தேசத்தை புரட்டி எடுத்த இலங்கை; 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

றுதியில் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி 11 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 

21:29 PM (IST)  •  31 Aug 2023

Asia Cup 2023 SL VS BAN LIVE: 5வது விக்கெட்டை இழந்த இலங்கை..!

இலங்கை அணி தனது 5வது விக்கெட்டை இழந்தாலும் வெற்றி இலக்கை எட்டிக்கொண்டுள்ளது. 

21:19 PM (IST)  •  31 Aug 2023

Asia Cup 2023 SL VS BAN LIVE: விக்கெட்டை இழந்த சமரவிக்ரமா..!

அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த சமரவிக்ரமா 77 பந்தில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

21:15 PM (IST)  •  31 Aug 2023

இமாலய வெற்றியை நோக்கி இலங்கை; தோல்வி வித்தியாசத்தை குறைக்க போராடும் வங்கதேசம்..!

29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி முன்னேறிக்கொண்டுள்ளது. 

20:49 PM (IST)  •  31 Aug 2023

Asia Cup 2023 SL VS BAN LIVE: 100 ரன்களை எட்டிய இலங்கை..!

நிதானமாக ஆடிவரும் இலங்கை அணி 22 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளார்.  

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget