IND vs PAK: அதிரடியில் பாகிஸ்தானை ஆட்டம் காண வைத்த 5 இந்திய வீரர்கள்.. இதிலும் சச்சின், கோலிதான் டாப்!
பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் அடித்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த பட்டியலை இங்கு காணலாம்.
ஆசிய கோப்பை 2023 போட்டியானது நேற்று முதல் தொடங்கி பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம்தான். இந்த போட்டியானது செப்டம்பர் 2ம் தேதி இலங்கைவில் உள்ள பல்லேக்கல்லே மைதானத்தில் 3 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் அடித்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த பட்டியலை இங்கு காணலாம். இதில், 183 ரன்களுடன் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு மிர்பூரில் நடந்த ஆசிய கோப்பையில் கோலி 148 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 183 ரன்கள் எடுத்தார். இவர்தான் இந்த பட்டியலில் டாப் ஆஃப் தி டேபிள்.
Will we expect to witness this version of #ViratKohli during the upcoming #AsiaCup2023 ?#INDvsPAKpic.twitter.com/XiepcsrUm5
— Sara Tendulkar FC (@saratendulkerr) August 28, 2023
இரண்டாவது இடத்தில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். இவர் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு தொடர் நடந்தது. இதில் கங்குலி 144 பந்துகளை எதிர்கொண்டு 141 ரன்கள் எடுத்தார். கங்குலியின் இந்த இன்னிங்ஸில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். இந்தப் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த பட்டியலில் கங்குலி 3வது இடத்தில் உள்ளார்.
அதே நேரத்தில், கடந்த 2004ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 141 ரன்கள் எடுத்தார். இதிலும், டாப் 5 இடங்களுக்குள் இடம் பிடித்து சச்சின் முத்திரை பதித்துள்ளார். இந்த போட்டியில் 141 ரன்கள் அடித்த சச்சினின் பேட்டில் இருந்து 17 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் வந்திருந்தது.
This God level six of Rohit Sharma again Pakistan will be remembered for ages 🔥.
— Tejash (@LoyleRohitFan45) August 22, 2023
Quotes your favourite six of Rohit Sharma ?#RohitSharma #CricketTwitterpic.twitter.com/n4nfjsfh7L https://t.co/dZheo8LS9f
இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா. இவர் கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சிறப்பாக விளையாடி சதம் கடந்தார். 2019 உலகக் கோப்பை போட்டியில் 113 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 140 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.