Virat Kohli 100th T20I : பாட்ஷாவாக மாறுவாரா கோலி? காத்திருக்கும் ரசிகர்கள்! இன்று 100வது போட்டி! எகிறும் எதிர்பார்ப்பு
Asia Cup 2022 : பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தனது 100 வது டி20 போட்டியில் இன்று விளையாட இருக்கிறார்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இரு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்றுள்ளார். மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெறவில்லை.
ஃபார்மிற்காக போராடி வரும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி வரவிருக்கும் ஆசிய கோப்பை 2022 தொடரில் 41 நாள் ஓய்வுக்கு பிறகு திரும்புகிறார். பலரும் இந்திய அணிக்குள் விராட் கோலி வருகை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் விராட் கோலி அணிக்குள் இருப்பது பலம்தான். தொடக்க விக்கெட்கள் டக்கென்று சரிந்தால் கோலி சரிவில் இருந்து மீட்பார் என்றும், மற்ற சிலர் சுத்தமாக பார்மில் இல்லாத ஒருவரை எப்படி அணியில் எடுக்கலாம், அதற்கு ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கலாமே என்றும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கோலி மீண்டும் தன் அதிரடியை காட்ட வேண்டுமென அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ஆசிய கோப்பைரோஹித் சர்மா தலைமையிலான அணி (இன்று )ஆகஸ்ட் 28 ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தனது 100 வது டி20 போட்டியில் விளையாட இருக்கிறார். கடந்த 2010 ம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக டி20 தொடரில் அறிமுகமான கோலி, தனது 100 வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்குவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மைல்கல் :
இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய 14 வது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற உள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை 132 டி20 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.
𝗜𝘁 𝗜𝘀 𝗛𝗲𝗿𝗲! @imVkohli on #AsiaCup2022 preparations, personal growth, mindset & more! 👍 👍 #TeamIndia | #AsiaCup
— BCCI (@BCCI) August 27, 2022
Watch this special feature 🎥 🔽 https://t.co/zz19PyX2rk pic.twitter.com/2YJMMmTKM4
ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லருக்குப் பிறகு அனைத்து வடிவங்களிலும் 100 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும், முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற இருக்கிறார்.
கடந்த 7 இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கோலி ரெக்கார்ட் :
கடந்த 7 இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி 3 அரைசதம் உள்பட 311 ரன்கள் குவித்துள்ளார். அவரது ரன்கள் முறையே 78, 9, 27, 36, 49, 55, 57 பதிவு செய்துள்ளார். அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிராக 77.75 ஆவரேஜ் உடன் 118. 25 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
Highest T20I Average against Pakistan
— Mufaddal Vohra (@mufaddal_vohre) August 10, 2022
[min. 300 runs]
77.75 - Virat Kohli
69.60 - Kevin Pietersen
45.42 - David Miller
35.58 - Eoin Morgan#ViratKohli | #AsiaCup | #INDvPAK pic.twitter.com/RzI9vMpYKP
டி20 தொடரில் விராட் கோலியின் பங்களிப்பு :
- கோஹ்லி 99 டி20 போட்டிகளில் விளையாடி 3308 ரன்களும் சராசரி 50.12 ரன்களும் எடுத்துள்ளார்.
- 33 வயதான அவர் 137.66 ஸ்ட்ரைக் ரேட்டில் 30 அரை சதங்களை அடித்துள்ளார்.
விராட் கோலியின் டி20 சாதனை:
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோஹ்லியின் சாதனை பல இருந்தாலும், டி20யிலும் அவரது சாதனை அதிக கவனம் பெற்றது. ஒரு காலத்தில், அனைத்து வடிவங்களிலும் சராசரியாக 50 பிளஸ் பெற்ற ஒரே ஒரு வலது கை பேட்ஸ்மேனாக கோலி இருந்தார்.