Team India Squad: ஆசிய கோப்பைக்கான இந்திய அணி... மீண்டும் திரும்பும் கே.எல்.ராகுல், விராட் கோலி
ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடருக்கான அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்,ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், சாஹல், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Notes -
— BCCI (@BCCI) August 8, 2022
Jasprit Bumrah and Harshal Patel were not available for selection owing to injuries. They are currently undergoing rehab at the NCA in Bengaluru.
Three players - Shreyas Iyer, Axar Patel and Deepak Chahar have been named as standbys.
இந்தத் தொடரில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். அதேபோல் ஹர்ஷல் பட்டேலும் காயம் காரணமாக இந்தத் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணிடுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும்.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்