Asia Cup Winners List: இந்தியாவே அதிக முறை.. இதுவே தொடர் கதை... 1984 முதல் 2018 வரை ஆசிய கோப்பை வென்ற அணிகள் பட்டியல்!
ஆசிய கோப்பை தொடர் தொடங்கப்பட்ட 1984 ம் ஆண்டு முதல் கடைசியாக நடைபெற்ற 2018 ம் ஆண்டு வரை கோப்பை வென்ற அணிகளின் பட்டியலை கீழே காணலாம்.
![Asia Cup Winners List: இந்தியாவே அதிக முறை.. இதுவே தொடர் கதை... 1984 முதல் 2018 வரை ஆசிய கோப்பை வென்ற அணிகள் பட்டியல்! Asia Cup 2022 Full Winners List All Time Since 1984 Asia Cup Past Winners Complete List Asia Cup Winners List: இந்தியாவே அதிக முறை.. இதுவே தொடர் கதை... 1984 முதல் 2018 வரை ஆசிய கோப்பை வென்ற அணிகள் பட்டியல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/9d6ed35eeb22d8a75a12265bd861a3e91660644229422175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடர் தொடங்கப்பட்ட 1984 ம் ஆண்டு முதல் கடைசியாக நடைபெற்ற 2018 ம் ஆண்டு வரை கோப்பை வென்ற அணிகளின் பட்டியலை கீழே காணலாம்.
1984 :
- கோப்பை வென்ற அணி : இந்தியா
- இரண்டாம் இடம்: இலங்கை
மூன்று அணிகள் கொண்ட லீக் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக சுரிந்தர் கண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1986 :
- கோப்பை வென்ற அணி : இலங்கை
- இரண்டாம் இடம்: பாகிஸ்தான்
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக அர்ஜுன ரணதுங்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1988 :
- கோப்பை வென்ற அணி : இந்தியா
- இரண்டாம் இடம்: இலங்கை
இறுதிப் போட்டியில் இலங்கை அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக நவ்ஜோத் சிங் சித்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 :
- கோப்பை வென்ற அணி : இந்தியா
- இரண்டாம் இடம்: இலங்கை
இறுதிப் போட்டியில் இலங்கை அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த தொடரில் யாருக்கும் தொடர் ஆட்ட நாயகன் விருது வழங்கப்படவில்லை.
1995 :
- கோப்பை வென்ற அணி : இந்தியா
- இரண்டாம் இடம்: இலங்கை
இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக நவ்ஜோத் சிங் சித்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1997 :
- கோப்பை வென்ற அணி : இலங்கை
- இரண்டாம் இடம்: இந்தியா
இறுதிப் போட்டியில் இந்திய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக அர்ஜுன ரணதுங்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000 :
- கோப்பை வென்ற அணி : பாகிஸ்தான்
- இரண்டாம் இடம்: இலங்கை
இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக முகமது யூசுப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004 :
- கோப்பை வென்ற அணி : இலங்கை
- இரண்டாம் இடம்: இந்தியா
இறுதிப் போட்டியில் இந்திய அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக சனத் ஜெயசூரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2008 :
- கோப்பை வென்ற அணி : இலங்கை
- இரண்டாம் இடம்: இந்தியா
இறுதிப் போட்டியில் இந்திய அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக அஜந்தா மெண்டிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2010 :
- கோப்பை வென்ற அணி : இந்தியா
- இரண்டாம் இடம்: இலங்கை
இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஷாஹித் அப்ரிடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2012 :
- கோப்பை வென்ற அணி : பாகிஸ்தான்
- இரண்டாம் இடம்: வங்காளதேசம்
இறுதிப் போட்டியில் வங்காளதேச அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக வங்காளதேச அணியை சேர்ந்த ஷகிப் அல் ஹசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014 :
- கோப்பை வென்ற அணி : இலங்கை
- இரண்டாம் இடம்: பாகிஸ்தான்
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக லஹிரு திரிமானே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 :
- கோப்பை வென்ற அணி : இந்தியா
- இரண்டாம் இடம்: வங்காளதேசம்
இறுதிப் போட்டியில் வங்காளதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக வங்காளதேச அணியை சேர்ந்த சபீர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018 :
- கோப்பை வென்ற அணி : இந்தியா
- இரண்டாம் இடம்: வங்காளதேசம்
இறுதிப் போட்டியில் வங்காளதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. தொடர் ஆட்ட நாயகனாக இந்திய அணியை சேர்ந்த ஷிகர் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)